Sunday 30 November 2014

மத்தியரசு பொதுத்துறை சீரழிப்பை கண்டித்து- டிச.5 மதுரையில் ஆர்ப்பாட்டம்.

அருமைத் தோழர்களே ! செப்டம்பர் மாதம் ஏற்கனவே,டெல்லியில் மத்திய சங்கங்கள் கூடி எடுத்த முடிவின் அடிப்படையில் இந்திய நாட்டு மக்களுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களை, தனியாருக்கு விற்கத்துடிக்கும் மத்திய ஆட்சியாளர்களைக் கண்டித்து, டிசம்பர் 5-ம் தேதி நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் இதற்கான அறைகூவல் விடுக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தை, மதுரையில்  வெற்றிகரமாக நடத்துவது குறித்து, CITU அலுவலகத்தில்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.CITU, BMS, INTUC, AITUC, HMS, AICCTUC, LPF ஆகிய தொழிற்சங்க அமைப்புகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தொலை தொடர்புத்துறை, இன்சூரன்ஸ், பாதுகாப்புத்துறை உள்ளிட்டவை களை, தனியாருக்கு தாரை வார்ப்பதுடன், தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், மாநில அரசு தொழிலாளர் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் டிசம்பர் 5-ம் தேதி, மதுரை  குட்செட் தெரு, தலைமை தபால் நிலையம் அருகில்  அனைத்து சங்கங்களின் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்  HMS தலைவர் ஆர்.கேசவன் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் பெருந்திரளாக கலந்து கொள்ளவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.CITU மாவட்டசெயலர் தோழர்.தெய்வராஜ் முன்னிலை வகுப்பார், CITU மாநிலச் செயலர் தோழர்.ஆர்.கருமலையான்  சிறப்புரை நிகழ்த்துவார். AITUC  மாநில நிர்வாகி எம். நந்தாசிங் , INTUC - K.S.G. குமார், LPF- KRC.அல்போன்ஸ் ராஜா மத்திய சங்க நிர்வாகிகளும்,  பொதுத்துறை   நிறுவனங்கள்,  வங்கிகள் மற்றும் தொலை தொடர்புத்துறை , இன்சூரன்ஸ்,  பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைவரும்  நடைபெற உள்ள பெருந்திரள் ஆர்ப்பாட்ட  கூட்டத்தில்  திரளாக கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நமது BSNLEU & TNTCWU தோழர்கள் அனைவரும் தவறாமல் 05.12.2014 வெள்ளிக் கிழமைமாலை 5 மணிக்கு,மதுரை குட்ஜெட் தெரு, தலைமை தபால் நிலையம் அருகே நடைபெறும்ஆர்ப்பாட்டத்தில்கலந்துகொள்ளவேண்டுமாய்அன்போடு அழைக்கின்றோம். --என்றும் தோழமையுடன், எஸ்.சூரியன் ---D/S-BSNLEU.

ஆதார் அட்டை குறித்த தகவல் . . .


நமது ALL INDIA Forum முடிவு-தயாராகுவோம்...

அருமைத் தோழர்களே ! Forum சார்பாக  03-02-2015  முதல் நாம் நடத்த   உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தை விளக்கி நமது   ஊழியர்கள் மற்றும்   பொது   மக்களிடம்  ஒரு மாபெரும்   பிரசார   இயக்கம்   நடத்துவது  என டெல்லியில் 13-11-14 அன்று நடைபெற்ற ALL INDIA Forum (அதிகாரிகள்&ஊழியர் சங்கங்களின்கூட்டமைப்பு)     கூட்டத்தில் சரியான   முடிவுகள்     எடுக்கப்பட்டு உள்ளது அதன்படி நாம்  கீழ்க்கண்ட இயக்கங்களை நடத்திட இபோதிருந்தே நமது மதுரை மாவட்டத்தில் உள்ள   அனைவரையும்    தயார் படுத்துவோம்.
05-12-2014 அன்று மத்திய சங்கங்களுடன் இணைந்து இயக்கம்.

Ø  11-12-2014 அன்று கோரிக்கை தினமாக கடைப்பிடிக்கப்படும்.
Ø11-12-2014 முதல் 20-12-2014  வரை பொதுமக்களிடம் பிரசார  இயக்கமும், கையெழுத்து  இயக்கமும் நடைபெறும் .
Ø  19-12-2014 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி .
Ø  06-01-2015 முதல் 08-01-2015 வரை தொடர் தர்ணா. 
Ø  03-02-2015 முதல்  காலவரையற்ற வேலைநிறுத்தம்.
----என்றும் தோழமையுடன், எஸ்.சூரியன்---D/S - BSNLEU.

அனைத்து ரயில்நிலையம் தனியார் மயமாக்கப்படும்: மோடி!

கொளகாத்தி: அனைத்து ரயில் நிலையங்களும் தனியார் மயமாக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.மேகலயா மாநிலத்தில் இதுவரை ரயில் சேவை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், அசாம்-மேகலயாவை இணைக்கும் விதமாக மென்டிபதார் முதல் கொளகாத்தி வரையிலான புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று 29-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
தனியார் மயம் அப்போது அவர் பேசுகையில், ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் ரயில் நிலையங்களில், விமான நிலையங்களை விட அதிக வசதிகள் இருக்க வேண்டும். இதற்காக ரயில் நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதன் முதற்கட்டமாக, 10 முதல் 12 ரயில் நிலையங்களை தேர்வு செய்து தனியாரின் உதவியுடன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார். சுதேசி பேசியவர்கள், விதேசியாகி இந்திய தேசத்தின் மக்கள் சொத்தான அனைத்து பொதுத் துறை நிறுவனங்களையும், அரசு துறைகளையும் இப்படி தனியார்களுக்கு தாரை வார்ப்பதை, தரணியில் உள்ள அனைவரும் ஒருசேர எதிர்த்து போரிடும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பது திண்ணம்.

மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கை-போராட்டம்

மோடி தலைமையிலான பாஜக அரசின் தொழிலாளர் விரோதக்கொள்கைகளை எதிர்த்து இந்தியா முழுவதும் தொழிலாளர் போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளதாக சிஐடியு அகில இந்திய தலைவர் .கே.பத்மநாபன் கூறினார்.சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் மதுரையில் நவம்பர் 28, 29 தேதிகளில்நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற .கே. பத்மநாபன், சனிக்கிழமை செய்தி யாளர்களிடம் கூறியதாவது:கடந்த 6 மாதங்களாக மத்திய அரசு கொள்கை ரீதியாக எடுத்துள்ள முடிவுகள் அனைத்தும், அனைத்துத் தொழிலாளர்களுக்கும் எதிரான நிலைபாட் டையே கொண்டுள்ளது.கடந்த காங்கிரஸ் அரசு பின்பற்றிவந்த அதேபொருளாதாரக் கொள்கைகளை அவர்களைவிட இன்னும் வேகமாக மோடி தலைமையிலான மத்தியஅரசு அமல்படுத்தி வருகிறது. கடந்த 24 ஆண்டுகளாக நவீன, தாரளமயக் கொள்கைகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் தற்போது முன்னை விட தீவிரமடைந்துள்ளது.
தொழில் வளர்ச்சிக்குஉதவாத கொள்கை
அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் பாஜக தொழிற்சங்கமான பிஎம்எஸ், காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐஎன்டியுசி, சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப் ஆகிய தொழிற்சங்கங்களுடன் வங்கி, தொலைத் தொடர்பு,பாதுகாப்புத்துறை, உற்பத்தி சார்ந்த தொழில்வாரி சங்கங்கள் இணைந்து செப்-15 ம் தேதி தில்லியில் அகில இந்திய மாநாட்டினை நடத்தின. மோடி அரசு பின்பற்றும் கொள்கைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவாது. உழைக் கும் மக்களுக்கு எந்தவிதத்திலும் பயன் தராது என்று நாடு முழுவதும் மோடி அரசுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் ஒன்று திரண்டு வருகிறது.இதையொட்டி எல்லா மாநிலங்களிலும் சிறப்பு மாநாடு கள் நடைபெற்று வருகின்றன.இதன் தொடர் நடவடிக்கையாக டிச - 5ம் தேதி தில்லியில் மட்டுமின்றி அனைத்து மாநில, மாவட்ட தலை நகரங்களில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஊழியர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர் விரோத சட்டங்கள்
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், புதிய வேலைவாய்ப்பு, சமூகப்பாதுகாப்பு, குறைந்தபட்ச கூலி உட்பட 10 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி 2009ம் ஆண்டிலிருந்து தொழிற் சங்கங்கள் போராடி வருகின்றன. தற்போது மத்தியில் உள்ள மோடி அரசு,வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்ப தென்ற பெயரில் காப்பீட்டுத்துறையில் 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டையும், ரயில்வே, பாதுகாப்புத்துறையில் முழுவதுமாக 100 சதவீதம் தனியார் என்றநிலையை எடுத்துள்ளது. இது எந்த வகையிலும் நம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. நவரத்னா என்றழைக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களை சூறை யாடுவதை அனுமதிக்க முடியாது.கடந்த 100 ஆண்டு காலமாக தொழிற் சங்க இயக்கம் எண்ணற்ற தியாகம் செய்து, போராடிப் பெற்ற தொழிலாளர் சட்டங்களுக்கும் இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது.இஎஸ்ஐ, பி.எப். போன்றவை சட்டத்திருத்தங்கள் மூலம் காலி செய்யப்பட உள்ளது.இது போல 14 பிரதான சட்டத்திருத்தங்களை நிறைவேற்ற பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. இது பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு எதிரான நடவடிக்கையாகும். கடந்த 2013ம் ஆண்டு முந்தைய காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட நில ஆர்ஜித சட்டம் விவசாய நிலங்களைப் பறித்து பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு கொடுப்பதற்கான ஏற்பாடாகும்.வெடிக்கும் போராட்டம்அங்கன்வாடிகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை எதிர்த்து கடந்த நவ-21 ம் தேதி அங்கன்வாடி ஊழியர்கள் 25 ஆயிரம் பேர் திரண்டு தில்லியில் மாபெரும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
புதிய ஓய்வூதியத் திட் டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 
  • டிச- 5ம் தேதி இந்தியா முழுவதும் எழுச்சிமிகு போராட்டம் நடத்தப்பட உள்ளது.
  • வருகிற டிச- 8 ம் தேதி மின்வாரிய பொறியாளர்கள் போராட்டத்தினை அறிவித்துள்ளனர்.
  • எரிசக்தி உரிமை மக்களின் அடிப்படை உரிமை என்பதை மாற்றி அதனையும் தனியார் மயமாக்கும் போக்கை எதிர்த்து நாடாளுமன்றம் நோக்கி இப்போராட்டம் நடத்தப்பட உள்ளது.
  • டிச -9 ம் தேதி பொதுத்துறை அதிகாரிகள் போராட்டத்தினை அறிவித்துள் ளனர்.
  • டிச-18 ம் தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் தில்லியில் மாபெரும் போராட்டத்தினை நடத்த உள்ளனர்.
  • டிச- 2 ம் தேதி முதல் மண்டலவாரியாக வங்கி ஊழியர்களின் போராட்டம் நடைபெற உள்ளது.
  • இன்சூரன்ஸ் மசோதா நிறைவேற்றப் பட்டால் உடனடியாக வேலைநிறுத்தப் போராட்டத்தினை நடத்த எல்ஐசி ஊழியர்கள் தயாராகி வருகிறார்கள்.
  • மத்திய சங்கங்களின் இப்போராட்டத் திற்கு அனைத்து துறைவாரி சங்கங்களும் ஆதரவளித்துள்ளன.
இவ்வாறு .கே.பத்மநாபன் கூறி னார்.இப்பேட்டியின் போது சிஐடியுமாநிலத்தலைவர் .சவுந்தரராசன் எம்.எல்., மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், மாநிலப் பொருளா ளர் மாலதி சிட்டிபாபு, மாநிலத்துணைத் தலைவர் ஆர்.சிங்காரவேலு, மாவட் டத்தலைவர் வீ.பிச்சை, மாவட்டச் செய லாளர் இரா.தெய்வராஜ் ஆகியோர் உட னிருந்தனர்

Saturday 29 November 2014

கார்ட்டூன் . . . கார்னர் . . .


29.11.14 - கலைவாணர் N.S. கிருஷ்ணன் பிறந்த நாள் . . .

தமிழ் திரைப்படத்துறையில்கலைவாணர்என அழைக்கப்பட்ட என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர். “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்புஎன்ற பாடல் ஒன்றே என். எஸ். கலைவாணரின் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். தமிழ் சுனிமா உலகில் நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல் நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன். தமிழில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இணையற்ற நகைச்சுவை நடிகராக விளங்கிய இவர், உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்ளின் போல, சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து கொடுத்தவர். ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு இந்திய சினிமா வரலாற்றிலேயே நகைச்சுவையில் அறிவுபூர்வமான பல கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுமார் ஐம்பது ஆண்டுகளைக் கடந்து, சினிமா ரசிகர்களின் மனதில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும், அவரின் வாழ்க்கை வரலாறுஅவர், 1908  ஆம் ஆண்டு நவம்பர் 29  ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ளநாகர்கோவிலுக்குஅருகில் ஒழுங்கினசேரி என்ற இடத்தில், ‘சுடலையாண்டி பிள்ளை’, என்பவருக்கும், ‘இசக்கியம்மாலுக்கும்மகனாக ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், கல்வி என்பது அவருக்கு எட்டாக்கனியாகவே போய்விட்டது. நான்காம் வகுப்புடன் தன்னுடைய பள்ளிப்படிப்பைப் நிறுத்துக்கொண்ட அவர், சிறுவயதிலேயே நாடகக் கொட்டையில் தின்பண்டங்கள் விற்கத் தொடங்கினார். நாளடைவில் நாடகங்கள் அவரை மிகவும் ஈர்த்ததால், ஒரு நாடகக்குழுவில் சேர்ந்து சிறிதுகாலம் நடித்து வந்தார். அதன் பிறகு தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து ஒரு நாடகக்குழுவை தொடங்கிய என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், பல நாடகங்களை இயக்கியும் நடித்தும் வந்தார்.
சிரிக்க வைத்த மாபெரும் சிந்தனையாளர் கலைவாணர்இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் வெறும் பொழுது போக்குக்காக மட்டுமல்லாமல், வாழ்வியலை ஒரு சில நொடிகளிலேயே புரிய வைக்கும் ஆற்றலை உண்டாக்கியவையாகும். யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக சிந்தனை மிகுந்த கருத்துக்களை வெளிப்படுத்தினார். அறிவியல் கருத்துக்களையும், தன்னுடைய நகைச்சுவை வாயிலாக வெளிப்படுத்தியவர். பல சீர்த்திருத்த கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். குறிப்பாகச் சொல்லப்போனால் என். எஸ். கிருஷ்ணன் அவரகள், சாதாரண நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல, தன்னுடைய சிரிப்பால் அனைத்து மக்களையும் சிந்திக்க வைத்தவர். இதானால் தான் இவருக்குகலைவாணர்என்ற பட்டம் 1947 ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நடராஜா கல்வி கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.
மறைவுநகைச்சுவையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய என். எஸ் கிருஷ்ணன் அவர்கள், 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி, தன்னுடைய நாற்பத்தொன்பதாவது வயதில் காலமானார். தமிழ்நாடு அரசு, அவரது நினைவாக, சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு, ‘கலைவாணர் அரங்கம்எனப் பெயர் சூட்டியது.தமிழ் சினிமாவில் பல கலைஞர்கள் உருவாகி, சாதித்து, மறைந்திருக்கலாம், ஆனால், என். எஸ். கலைவாணரைப் போல், நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைத் திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக்கூறியவர் எவரும் இல்லை. கருத்துக்களை வழங்குவதில் மட்டும் இவர் வள்ளலாக இருந்துவிட வில்லை, தமது வாழ்க்கையிலும் ஆயிரக் கணக்கானவர்களுக்குப் பணத்தை வாரி வழங்கிய அற்புத மனிதர் ஆவார். உண்மையை சொல்லப்போனால், என். எஸ். கிருஷ்ணன் அவர்களை நகைச்சுவை நடிகர் என்ற வட்டத்துக்குள் அடைத்துவிட முடியாது, சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதிகளைத் தூவிய மாபெரும் சிந்தனையாளர். காலங்கள் மாறினாலும், திரைப்படத்துறையில் மாற்றங்கள் பல நிகழ்ந்தாலும், என். எஸ். கலைவாணர் அவர்கள் நூற்றாண்டுகள் பல கடந்தும், கலையுலகில் சாகா சரித்திர நாயகனாக வாழ்ந்துவருகிறார் என்பதில், எந்தவித ஐயமும் இல்லை.