Wednesday, 19 November 2014

இந்தியவம்சாவளி மாணவிக்கு குழந்தைக்கான அமைதி விருது

ஆதரவற்ற குழந்தைகளுக்கு தொடர்ந்து உதவி செய்து வருவதற்காக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க மாணவி நேகா குப்தாவுக்கு, குழந்தைகளுக்கான சர்வதேச அமைதி விருது வழங்கப்பட்டது.இதற்கு முன்பு, கடந்த ஆண்டு இந்த விருதை பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய் பெற்றிருந்தார். அமெரிக்காவின் ஃபிலடெல்பியா மாகாணத்தைச் சேர்ந்த நேகா, இந்த விருதை பெறும் முதல் அமெரிக்கர் ஆவர்.இவருக்கு நெதர்லாந்தில் உள்ள ஹேக் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது இந்த விருதை அமைதிக்கான நோபல் விருது பெற்ற டெய்மாண்டு டூட்டு வழங்கினார்.
இந்த விருது, குழந்தைகளின் உரிமைக்காக பாடுபடும் சிறுவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.நேகா தனது 9ஆம் வயதில் இந்தியாவுக்கு தனது பெற்றோருடன் சென்றிருந்தார். அங்கு ஆதரவற்ற குழந்தைகளின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அப்போது குழந்தைகளுக்கான தனது சேவையை தொடங்கினார்.பின்னர் அமெரிக்கா திரும்பிய அவர், அங்கிருந்த தனது பொம்மைகளை விற்று பணம் திரட்ட முடிவெடுத்தார்.அதன்படி அவர் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அதன்மூலம் 700 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.43,000) பணம் திரட்டினார்.அதைத்தொடர்ந்து அவர் கைவினைப் பொருள்களை வீடு வீடாகச் சென்று விற்பனை செய்து பணத்தை திரட்டினார்.9 வருடங்களுக்குப் பிறகு தற்போது கல்லூரி மாணவியாக திகழும் நேகா, ஆதரவற்றோர்களுக்கென "எம்பவர் ஆர்ஃபன்ஸ்' என்ற பெயரிலான அறக்கட்டளை நடத்தி வருகிறார்இதன்மூலம் இதுவரை ரூ. 8 கோடி திரட்டி உதவி புரிந்துள்ளார்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

நேகா குப்தாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்