மதுரை மக்களால் ஐமாபா என்றழைக்கப்படும் 98 வயது தியாகி ஐயா ஐ.மாயாண்டி பாரதியை கடந்த வாரம் மதுரை போன போது அவசியம் பார்க்கவேண்டும் என்று போயிருந்தேன்.மதுரை மேலமாசிவீதி காக்காதோப்பு தெருவில் உள்ள பாரதமாதா இல்லம் என்ற அவரது வீட்டில் அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள சிறிய அறையில் நைந்து போன பொருட்களுக்கு நடுவில் அவரும் நைந்து போய் கட்டிலில் கிடந்தார்.தெரியாதவர்களுக்காக அவரைப்பற்றிய ஒரு சிறு முன்னோட்டம்.

நம்நாடு சுதந்திரம் பெறுவதற்காக இன்னுயிரான தன்னுயிர்பற்றி கவலைப்படாமல் அரும்பாடு பட்டவர்களில் உயிருடன் இருப்பவர்கள் மிகக்குறைவு அதிலும் சுதந்திர போராட்ட உணர்வுகள் குறைந்துவிடாது உயிர்ப்புடன் இருப்பவர்கள் இன்னும் குறைவு அவர்களில் அநேகமாக நம் மண்ணில் எஞ்சியிருப்பவர் ஐமாபா மட்டுமே என்றே தோன்றுகிறது.என் போராட்ட வாழ்க்கையைப் பற்றி கேள்விப்பட்டு தொழில்துறை அமைச்சராக இருந்த வெங்கட்ராமன் உனக்கு என்ன தொழில் வேண்டும் நான் அனுமதிக்கிறேன் என்றார் ஐயா தயவு செய்து என்னை பணக்காரனாக்கிடாதீங்க என்று சொல்லிவிட்டு அவரது அனுமதியை மறுத்தவன் நான்.என்னுடைய ஆசை எல்லாம் அன்றாடம் நிறைய மாணவர்களை பார்த்து சுதந்திர போராட்ட வரலாறை எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதுதான் அதற்கேற்ற வசதியைத் தவிர வேறு எதுவும் எனக்கு தேவையில்லை.எனது புத்தகங்களை மலிவு விலை பதிப்பாக போட்டு மாணவர்களுக்கு கொடுத்துவருகிறேன் எனக்கு வரும் மத்திய அரசு பென்ஷன் தொகை அந்த புத்தக பதிப்பு செலவிற்கே சரியாகப் போய்விடுகிறது பத்திரிகையாளர் பென்ஷனில்தான் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன் இப்போது கடந்த நான்கு மாதங்களாக அதை நிறுத்திவிட்டார்கள். கேட்டால் கேலி செய்து சிரிக்கிறார்களே தவிர காரணம் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.
மேற்கொண்டு பேச தெம்பு இல்லாதவராக அப்படியே படுக்கையில் சாய்ந்து படுத்துக் கொள்கிறார்.
No comments:
Post a Comment