அருமைத் தோழர்களே ! கொல் கொத்தாவில் மிகவும் சீரும் சிறப்புமாக நடை பெற்ற நமது BSNLEU 7 வது AIC-ல் தமிழ் மாநில சங்கம் சார்பாக சமர்பிக்கப்பட்ட பிரச்சனைகளின் சாராம்சம்
1.ட்ராப் வயர் , 5 pair கேபிள் ,10 pair ,20 pair ,OFC கேபிள் பற்றாக்குறை ,தொலைபேசி இன்ஸ்ட்ருமென்ட் பற்றாக்குறை ,மோடம் பற்றாக்குறையினால் தொலைபேசி பழுதுகளை சரி செய்வது தாமதம் ஆவதால் விரைவில் இப் பற்றாக்குறை சரி செய்யப்படவேண்டும்.
2. தொலைபேசி ஆலோசனை குழுவை கலைக்க வேண்டும் .கலைக்க முடியாவிட்டால் ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படும் தொலைபேசி இணைப்புகளுக்கான செலவை அரசாங்கம் ஏற்று கொள்ள வேண்டும் .
3. சட்ட பேரவை மற்றும் நாடாளுமண்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படும் தொலைபேசி இணைப்புகளுக்கான செலவையும் அவர்கள் பேசும் தொலை பேசி பில்லுக்கான தொகையையும் அரசே ஏற்று கொள்ள வேண்டும் .
4. சிம் கார்டில் TOPUP செய்யும் போதே Validity period நீட்டிக்க ப்படவேண்டும்
5.கேபிள் pair இல்லாத பகுதிகளில் குறிப்பாக புதிய அடுக்கு மாடி குடியிருப்புகளில் GPON சிஸ்டம் அதிகப்படுத்த வேண்டும்.
6.தரைவழி இணைப்புகளுக்கு வாடகை குறைக்கப்படவேண்டும்.
7.மின்னணு தொலைபேசி நிலையங்களில் பயன்படுத்தப்படும் ARC மற்றும் ARI கார்டுகளின் பற்றாக்குறை சரி செய்யப்பட வேண்டும்
8. பிரசவத்திற்கான மருத்துவத்தை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க வேண்டும்,
9.CSC ஊழியர்களுக்கு இரண்டாம் சனிக்கிழமை விடுமுறையாக அறிவிக்க வேண்டும்
10.NE-12 கிடைக்காத ஊழிய்ரகளுக்கு பணி ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடம் முன்பாக ஒரு இன்கிரிமெண்ட் வழங்கப்பட வேண்டும் .
11.இதய நோய் தீராத நோய்கள் பட்டியலில் சேர்க்க ப்படவேண்டும்
12.NE-1 முதல் NE-5 வரை உள்ள Pay Scale இல் ஊதிய தேக்கம் களையப் பட வேண்டும்
13.GSLI இல் இழப்பீடு தொகை 3 லட்சமாக Gr "C
" மற்றும் Gr
"D" ஊழிய்ரகளுக்கு அதிகரிக்கப்பட வேண்டும்
14.TM, TTA, JTO ஆளெடுப்பு விதிகளில் தளர்வு செய்யப்பட வேண்டும் .
15.பென்ஷன் கணக்கீட்டில் TSM சேவை காலத்தை முழுமையாக எடுத்து கொள்ள வேண்டும் .
16. BSNL நிறுவனத்தின் சொத்துக்கள் அரசிடம் இருந்து BSNL நிறுவனத்திற்கு மாற்றப்பட வேண்டும் .
17. BTS மற்றும் POWER PLANT பகுதிகளில் பழுதடைந்த பாட்டரி களை மாற்றுவது .
18 கோயம்புத்தூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பல் ஊர்களில் HRA மாற்றம் செய்யப்படவேண்டும்
19.மலை பகுதியான நீலகிரி மாவட்டத்தில் ஊழியர் பற்றாகுறை சரி செய்ய சிறப்பு ஆளெடுப்பு நடத்தப்படவேண்டும் .
20.தரை வழி இணைப்பில் ஒரு அழைப்புக்கான காலவரையறை 3 நிமிடங்களாக மாற்றப்பட வேண்டும்.
21.முதன்மை சங்கமான நமது BSNLEU சங்கத்திற்கு விகிதாசார அடிப்படையில் வொர்க்ஸ் கமிட்டி மற்றும் Welfare கமிட்டிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் .
22.அனைத்து கேடர்களுக்கும்(ஓட்டுனர்கள் உட்பட) மிகுதி நேரப்படி உயர்த்தப்படவேண்டும் .
23. குறைந்த கட்டண அடிப்படையில் ஆன TOPUP கார்டுகள் வாடிக்கையாளர் சேவை மையங்களில் கிடைக்கவேண்டும் .
24. பரிவு அடிப்படையில் ஆன நியமனங்களை தாமதம் இன்றி நியமிக்க வேண்டும்
25."Payment Basis " அடிப்படையில் கூடுதல் ஆன மருத்துவ மனைகளை அங்கீகரிக்க வேண்டும் .
26.அனைத்து அலவன்சுகளையும் உயர்த்திட வேண்டும்.
27. 3 வது ஊதிய மாற்றத்திற்கு உடனடியாக பேச்சு வார்த்தை துவங்கிட வேண்டும் .
28. ஒப்பந்த ஊழியர்களுக்கு அவர்கள் பணிக்கேற்ற semi skilled /
skilled ஊதியம் வழங்க வேண்டும் .
29. பயிற்சி மற்றும் மறு பயிற்சி வாயிலாக RM கேடரில் இருந்து TM கேடருக்கும் , TM கேடரில் இருந்து TTA கேடருக்கும் உயர்நிலைபடுத்தப்படவேண்டும்.
இது போன்று மொத்தம் 40 கோரிக்கைகள் 7 வது அனைத்திந்திய மாநாட்டில் தமிழ்மாநில சங்கம் சார்பாக சமர்பிக்கப்பட்டது முழு விபரங்கள் தொடர்ந்து தெரிவிக்கப்படும்.
இது போன்று மொத்தம் 40 கோரிக்கைகள் 7 வது அனைத்திந்திய மாநாட்டில் தமிழ்மாநில சங்கம் சார்பாக சமர்பிக்கப்பட்டது முழு விபரங்கள் தொடர்ந்து தெரிவிக்கப்படும்.
---என்றும் தோழமையுடன், எஸ்.சூரியன் ...D/S-BSNLEU.
No comments:
Post a Comment