மதுரை G.M (O)-ல் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்...
அருமைத் தோழர்களே! நமது அகில இந்திய JACஅறிவித்திருந்ததிதன்
அடிப்படையில் 20.14.14வியாழன் மதியம் ஒரு மணிக்கு மதுரைமாவட்ட JAC தலைவரும். NFTEசங்கத்தின்மாவட்ட செயலருமான தோழர். எஸ். சிவகுருநாதன் தலைமையில் 30 அம்ச கோரிக்கையை தீர்க்க வலியுறித்தி 27 பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில்FNTO மாவட்டப் பொருளாளர் தோழர்.கே.ஸ்டாலின் தனது ஆழமான கருத்துக்களை எடுத்துரைத்து, எதிர்வரும் 27.11.14 நடை பெற உள்ள ஒருநாள் போராட்டத்தை அனைவரும் சக்தியாக நடத்து வோம் என வேண்டுகோளும், உறுதிமொழியும் தெரிவித்தார்.
அதன்பின், மதுரை மாவட்டJAC கண்வீனரும், BSNLEU சங்கத்தின் மாவட்ட செயலருமான தோழர். எஸ். சூரியன் தனது உரையில், 30 அம்ச கோரிக்கைகளை வலியுறித்தியும், நமது கோரிக்கையின் நியாயத்தை எடுத்து கூறியதோடு, இன்றைய மத்திய அரசின் நிலைபாட்டையும், BSNL நிறுவனத்தில் உயர்மட்ட அதிகாரிகளின் போக்கினால் நமது துறையை நலிவுறச் செய்வது குறித்தும் எனவே, நமது BSNL பொதுத்துறையை பாதுகாக்கவும் எதிர்வரும் 27.11.14 ஒருநாள் போராட்டத்தையும், அதனை கோரிக்கை தீரும்வரை நமது மத்திய சங்கங்கள் கொடுக்க கூடிய அறை கூவலை சிரமேற்கொண்டு செய்திட வேண்டுமாய் கேட்டுக்கொண்டார்.
திண்டுக்கல்லில் வேலைநிறுத்த விளக்க கூட்டம்....
20.11.2014 மாலை திண்டுக்கல் அவுட்டோர் அலுவலகத்தில் போராட்ட விளக்க கூட்டம் வெகு விமர்சியாக, BSNLEUசங்கத்தின் திண்டுக்கல் நகர் கிளைச் செயலர் தோழர்.ஜே.ஜோதிநாதன் தலைமையில் நடைபெற்றது. NFTEசங்கத்தின்கிளைச்செயலர்தோழர்.எஸ்.அருளானந்தம் வரவேற்புரை நிகழ்த்தினார்.7 பெண்கள் உட்பட 100க்கனக்கானோர் கலந்து கொண்டனர். நடைபெற்ற விளக்க கூட்டத்தில் நமது BSNLEUசங்கத்தின் தமிழ் மாநில துணைத் தலைவர் தோழர். எஸ். ஜான் போர்ஜியா கலந்து கொண்டார்.
போராட்ட விளக்க கூட்டத்தில் NFTEசங்கத்தின் மாவட்ட உதவிச் செயலர் தோழர்.கோவிந்தராஜ், மதுரை மாவட்டJAC கண்வீனரும், BSNLEU சங்கத்தின் மாவட்டசெயலருமான தோழர்.எஸ். சூரியன், TEPU சங்கத்தின் அகிலஇந்தியதுணைசெயலர்தோழர்.M.கண்ணதாசன், BSNLEUசங்கத்தின்
மாநில உதவிச் செயலர், தோழர்.M. முருகையா சிறப்புரை நிகழ்த்தி னார்கள். கூட்டத்தில் அனைவரும் போராட்டத்தை 100 சதம் வெற்றி பெறச் செய்வோம் என் உறுதி அளித்தனர். இறுதியாக TEPU சங்கத்தின் கிளைச் செயலர். தோழர் எஸ். உதயசூரியன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. ---என்றும் தோழமையுடன், எஸ்.சூரியன் --D/S-BSNLEU.
No comments:
Post a Comment