- · நட்டத்தில் இயங்கும் பொதுத்துறைகளை விற்று விடலாம் அல்லது மூடி விடலாம் என நமது புதிய நிதி மந்திரி (அருண் ஜெட்லேவின் அறிவிப்பு) தன் திருவாய் மலர்ந்துள்ளார். நோயை அழிப்பதல்ல.. நோயாளியை அழிப்பது...என்பது தற்போதைய BJPஅரசின் கொள்கை என்பது புரிகிறது.
- · ஊழியர் குடியிருப்புக்களில் தேவையான பராமரிப்பு பணிகளைச் செய்வதற்கு மாநில CGMகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிதி நெருக்கடியைக் கணக்கில் கொண்டு செலவிட CGMகள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்
- · ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்குவதற்கான அனுமதி கோரி மத்திய அமைச்சரவைக்கு DOT யால் குறிப்பு அனுப்பப்படவுள்ளது. IDA இணைப்பு விவகாரத்தில் இன்னும் இரு மாதங்கள் பொறுக்கலாம் என்றும் அதன் பின்னும் தாமதம் தொடர்ந்தால் போராட்டத்தில் இறங்கலாம் என்றும் AIBSNLPWA ஓய்வூதியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
- · தமிழ் மாநில JCM கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சென்னை மீனம்பாக்கம் பயிற்சி மையத்தில் 3 விடுமுறை வீடுகளை HOLIDAY HOME திறப்பதற்கு தமிழ் மாநில நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
- · தங்களது மாவட்டம் தாண்டி மற்ற மாவட்டங்களில் மருத்துவ சிகிச்சை எடுப்பதற்கான அனுமதி அந்தந்த மாவட்ட DGMகளே வழங்கலாம் என மாநில நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. மாவட்டம் தாண்டி மருத்துவ சிகிச்சை எடுப்பதற்கான அனுமதி அளிக்கும் அதிகாரம் GMகளுக்கே வழங்கப்பட்டிருந்தது. பல மாவட்டங்களில் GMகளே மாவட்டம் தாண்டி இருப்பதால் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- · காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்த வகைசெய்யும் சட்டதிருத்த மசோதா பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, நேற்று டில்லியில் கூறினார்.
- · மேக் இன் இந்தியா என்ற திட்டம் துவங்கியது முதல் இந்தியாவில் 100 பில்லியன் டாலர் அன்னிய முதலீடு இந்தியா நோக்கி வரத் துவங்கியிருக்கின்றன. இவ்வாறு முதலீடுகள் நமது நாட்டின் கதவை தட்டுகிறது என்று பெருமைபட பிரதமர் மோடி பேசினார்.
Monday, 10 November 2014
செய்தித் . . . துளிகள் . . .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment