டெல்லியில் இந்தியத் தொழிலக கூட்டமைப்பு புதன்கிழமை (CII) ஏற்பாடு செய்திருந்த உலக பொருளாதார பேரவை மாநாட்டில் பேசுகையில் ஜேட்லி இத்தகவலைத் தெரிவித்தார்.
நஷ்டத்தில் இயங்கும் சில பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் வசம் சென்றால் அது சிறப்பாக செயல்படும் என கண்டறியப் பட்டுள்ளது. அத்தகைய நிறுவனங்களை தனியாருக்கு அளிக்க அரசு தயாராக உள்ளதுஎன்று அவர் கூறினார்.சில பொதுத்துறை நிறுவனங்கள் கட்டாயம் மூட வேண்டிய சூழலில் உள்ளன. இதனால் அதில் பணிபுரியும் ஊழியர்கள் வேலையிழப்பார்கள். இதே நிலையில் அவர்கள் தொடர அனுமதிப்பதா அல்லது அத்தகைய நிறுவனங்களை தனியாரிடம் அளிப்பதன் மூலம் அந்நிறுவனங் களுக்கு புத்துயிரூட்டி வேலையில் தொடரும் நிலையை உருவாக்குவதா என்று நினைக்க வேண்டும்.இப்படி பார்க்கும்போது தனியாரிடம் அளித்து பணியில் தொடர்வதுதான் சிறந்த முடிவாக ஊழியர் களுக்கு இருக்க முடியும் என்றார்.நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் அரசின் தயவில் வெறுமனே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நீண்ட கால நோக்கில் இது சரியான நடவடிக்கையாக இருக்காது. வரி செலுத்தும் மக்களின் பணம் நஷ்டத்தில்இயங்கும் நிறுவனத்துக்கு தொடர்ந்து செல்வதை மக்கள் தொடர்ந்து அனுமதிக்க மாட்டார்கள் என்று அவர் சுட்டிக் காட்டினார்.மொத்தம் 79 பொதுத்துறை நிறு வனங்கள் நஷ்டத்தில் செயல்படுகின்றன. இத்தகைய நிறுவனங் களில் அரசின் முதலீடு ரூ. 1.57 லட்சம் கோடி முடங்கியுள்ளது. மேலும் இத்தகைய நிறுவனங்களின் செயல்பாட்டுக்கென பட்ஜெட்டில் ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டது. இத்தொகை வெறுமனே ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்கத்தான் பயன்பட்டுள்ளது.நடப்பு நிதி ஆண்டில் அரசுத்துறை பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ. 43,425 கோடியைத்
திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் ஜேட்லி கூறினார்.
No comments:
Post a Comment