Sunday, 30 November 2014

மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கை-போராட்டம்

மோடி தலைமையிலான பாஜக அரசின் தொழிலாளர் விரோதக்கொள்கைகளை எதிர்த்து இந்தியா முழுவதும் தொழிலாளர் போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளதாக சிஐடியு அகில இந்திய தலைவர் .கே.பத்மநாபன் கூறினார்.சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் மதுரையில் நவம்பர் 28, 29 தேதிகளில்நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற .கே. பத்மநாபன், சனிக்கிழமை செய்தி யாளர்களிடம் கூறியதாவது:கடந்த 6 மாதங்களாக மத்திய அரசு கொள்கை ரீதியாக எடுத்துள்ள முடிவுகள் அனைத்தும், அனைத்துத் தொழிலாளர்களுக்கும் எதிரான நிலைபாட் டையே கொண்டுள்ளது.கடந்த காங்கிரஸ் அரசு பின்பற்றிவந்த அதேபொருளாதாரக் கொள்கைகளை அவர்களைவிட இன்னும் வேகமாக மோடி தலைமையிலான மத்தியஅரசு அமல்படுத்தி வருகிறது. கடந்த 24 ஆண்டுகளாக நவீன, தாரளமயக் கொள்கைகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் தற்போது முன்னை விட தீவிரமடைந்துள்ளது.
தொழில் வளர்ச்சிக்குஉதவாத கொள்கை
அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் பாஜக தொழிற்சங்கமான பிஎம்எஸ், காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐஎன்டியுசி, சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப் ஆகிய தொழிற்சங்கங்களுடன் வங்கி, தொலைத் தொடர்பு,பாதுகாப்புத்துறை, உற்பத்தி சார்ந்த தொழில்வாரி சங்கங்கள் இணைந்து செப்-15 ம் தேதி தில்லியில் அகில இந்திய மாநாட்டினை நடத்தின. மோடி அரசு பின்பற்றும் கொள்கைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவாது. உழைக் கும் மக்களுக்கு எந்தவிதத்திலும் பயன் தராது என்று நாடு முழுவதும் மோடி அரசுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் ஒன்று திரண்டு வருகிறது.இதையொட்டி எல்லா மாநிலங்களிலும் சிறப்பு மாநாடு கள் நடைபெற்று வருகின்றன.இதன் தொடர் நடவடிக்கையாக டிச - 5ம் தேதி தில்லியில் மட்டுமின்றி அனைத்து மாநில, மாவட்ட தலை நகரங்களில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஊழியர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர் விரோத சட்டங்கள்
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், புதிய வேலைவாய்ப்பு, சமூகப்பாதுகாப்பு, குறைந்தபட்ச கூலி உட்பட 10 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி 2009ம் ஆண்டிலிருந்து தொழிற் சங்கங்கள் போராடி வருகின்றன. தற்போது மத்தியில் உள்ள மோடி அரசு,வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்ப தென்ற பெயரில் காப்பீட்டுத்துறையில் 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டையும், ரயில்வே, பாதுகாப்புத்துறையில் முழுவதுமாக 100 சதவீதம் தனியார் என்றநிலையை எடுத்துள்ளது. இது எந்த வகையிலும் நம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. நவரத்னா என்றழைக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களை சூறை யாடுவதை அனுமதிக்க முடியாது.கடந்த 100 ஆண்டு காலமாக தொழிற் சங்க இயக்கம் எண்ணற்ற தியாகம் செய்து, போராடிப் பெற்ற தொழிலாளர் சட்டங்களுக்கும் இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது.இஎஸ்ஐ, பி.எப். போன்றவை சட்டத்திருத்தங்கள் மூலம் காலி செய்யப்பட உள்ளது.இது போல 14 பிரதான சட்டத்திருத்தங்களை நிறைவேற்ற பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. இது பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு எதிரான நடவடிக்கையாகும். கடந்த 2013ம் ஆண்டு முந்தைய காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட நில ஆர்ஜித சட்டம் விவசாய நிலங்களைப் பறித்து பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு கொடுப்பதற்கான ஏற்பாடாகும்.வெடிக்கும் போராட்டம்அங்கன்வாடிகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை எதிர்த்து கடந்த நவ-21 ம் தேதி அங்கன்வாடி ஊழியர்கள் 25 ஆயிரம் பேர் திரண்டு தில்லியில் மாபெரும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
புதிய ஓய்வூதியத் திட் டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 
  • டிச- 5ம் தேதி இந்தியா முழுவதும் எழுச்சிமிகு போராட்டம் நடத்தப்பட உள்ளது.
  • வருகிற டிச- 8 ம் தேதி மின்வாரிய பொறியாளர்கள் போராட்டத்தினை அறிவித்துள்ளனர்.
  • எரிசக்தி உரிமை மக்களின் அடிப்படை உரிமை என்பதை மாற்றி அதனையும் தனியார் மயமாக்கும் போக்கை எதிர்த்து நாடாளுமன்றம் நோக்கி இப்போராட்டம் நடத்தப்பட உள்ளது.
  • டிச -9 ம் தேதி பொதுத்துறை அதிகாரிகள் போராட்டத்தினை அறிவித்துள் ளனர்.
  • டிச-18 ம் தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் தில்லியில் மாபெரும் போராட்டத்தினை நடத்த உள்ளனர்.
  • டிச- 2 ம் தேதி முதல் மண்டலவாரியாக வங்கி ஊழியர்களின் போராட்டம் நடைபெற உள்ளது.
  • இன்சூரன்ஸ் மசோதா நிறைவேற்றப் பட்டால் உடனடியாக வேலைநிறுத்தப் போராட்டத்தினை நடத்த எல்ஐசி ஊழியர்கள் தயாராகி வருகிறார்கள்.
  • மத்திய சங்கங்களின் இப்போராட்டத் திற்கு அனைத்து துறைவாரி சங்கங்களும் ஆதரவளித்துள்ளன.
இவ்வாறு .கே.பத்மநாபன் கூறி னார்.இப்பேட்டியின் போது சிஐடியுமாநிலத்தலைவர் .சவுந்தரராசன் எம்.எல்., மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், மாநிலப் பொருளா ளர் மாலதி சிட்டிபாபு, மாநிலத்துணைத் தலைவர் ஆர்.சிங்காரவேலு, மாவட் டத்தலைவர் வீ.பிச்சை, மாவட்டச் செய லாளர் இரா.தெய்வராஜ் ஆகியோர் உட னிருந்தனர்

No comments: