Wednesday, 26 November 2014

26.11.14-மதுரை மாநகர் முழுவதும் JAC சுற்றுபயணம்...

அன்பிற்கினியவர்களே ! 26.11.14-அன்று மதுரை மாநகர் முழுவதும்  நமது மதுரை மாவட்ட JAC  போராட்ட ஆதரவு சுற்றுபயணம் மேற்கொண்டது ...
காலை மதுரை கீழமாசி வீதி தொலைபேசியகத்தில் துவங்கிய பயணத்தில் தோழர்கள் எஸ். சிவகுருநாதன், எஸ். சூரியன், என்.முருகன், மனோகரன், சி. செல்வின் சத்தியராஜ், கே.முருகேசன், செந்தில்குமார், எஸ். சலீம் , கே.என்.செல்வன் ஆகியோர் உடனிருந்து ஒவ்வொரு ஊழியரையும் நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு திரட்டப்பட்டது.
அதன்பின் மதுரை வடக்கு சித்திரை தொலைபேசியகத்தில் னைத்து ஊழியர்களையும் நேரடியாக சந்தித்து போராட்ட ஆதரவு அனைவரிடமும் திரட்டபட்டது.இந் நிகழ்வின்போது தோழர்கள் எஸ். சிவகுருநாதன், எஸ். சூரியன், என்.முருகன், மனோகரன், சி. செல்வின் சத்தியராஜ், கே.முருகேசன், செந்தில்குமார், ஆர்.குருசாமி, அழகர்சாமி  ஆகியோர் உடனிருந்தனர்.
அடுத்தபடியாக வில்லாபுரம் தொலைபேசியகத்தில் நடைபெற்ற போராட்ட ஆதரவு திரட்டலில் தோழர்கள்  எஸ். சூரியன், என்.முருகன், மனோகரன், சி. செல்வின் சத்தியராஜ், கே.முருகேசன், செந்தில்குமார், எஸ்.மானுவேல் பால்ராஜ், பி .கிருபானந்தம்,   ஆகியோர் உடனிருந்தனர். அதனை தொடர்ந்து டி .வி.எஸ் நகர் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கும் சென்று போராட்ட ஆதரவு திரட்ட பட்டது.
தொடர்ச்சியாக அழகப்பநகர் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்ற போராட்ட ஆதரவு கூட்டத்தில் தோழர்கள்  எஸ். சூரியன், என்.முருகன், மனோகரன், சி. செல்வின் சத்தியராஜ், கே.முருகேசன், செந்தில்குமார்,  பி .கிருபானந்தம்,முருகன் ஆகியோர் உடனிருந்த்தனர்.அடுத்த கட்டமாக பழங்கா நத்தம் தொலைபெசியகத்தில் போராட்ட ஆதரவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தோழர்கள்  எஸ். சூரியன், என்.முருகன், மனோகரன், சி. செல்வின் சத்தியராஜ், கே.முருகேசன், செந்தில்குமார்,  பி .கிருபானந்தம்,ஆர்.சண்முகவேல், கண்ணன் ஆகியோரும் உடன் இருந்தார்கள்.
அதன்பின் எல்லிஸ் நகர் தொலைபேசியகத்திற்கு சென்று போராட்ட ஆதரவு திரட்டப்பட்டது. 4 மாடிக்கும் சேறு பல்வேறு தோழர்களையும் சென்று போராட்ட ஆதரவு கோரினோம்.தொடர்ச்சியாக பொன்மேனி தொலைபெசியகத்திற்க்கும் சென்று போராட்ட ஆதரவு கோரப்பட்டது.இந் நிகழ்ச்சியின் போது தோழர்கள்  எஸ். சூரியன்,, மனோகரன், சி. செல்வின் சத்தியராஜ், கே.முருகேசன், செந்தில்குமார்,  பி .கிருபானந்தம்,ஆர்.சண்முகவேல், கண்ணன் ஆகியோரும் உடன் இருந்தார்கள். 
அதன்பிறகு நமது போராட்ட வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு திரட்டும் பணிகள் நியு ஜெயில் ரோட்டில் அமைந்துள்ள  தொலை பேசியகத்தில் உள்ள அனைத்து தோழர்களிடமும் போராட்ட ஆதரவு திரட்டப்பட்டது. இதில் தோழர்கள்  எஸ். சூரியன்,, மனோகரன், சி. செல்வின் சத்தியராஜ், செந்தில்குமார், ,ஆர்.சண்முகவேல், கண்ணன், ராஜேந்திரன்  ஆகியோரும் உடன் இருந்தார்கள்.
அதனை தொடர்ந்து கே.கே.நகர் தொலைபேசியகம், கே.புதூர் தொலைபேசியகம் , திருப்பாலை ஆகிய இடங்களுக்கும்  சென்று போராட்ட ஆதரவு திரட்டப்பட்டநிகழ்வில் ,    
தோழர்கள்  எஸ். சூரியன்,, மனோகரன், சி. செல்வின் சத்தியராஜ், செந்தில்குமார் ஆகியோர் இறுதிவரை உடன் இருந்தார்கள். நமது 27.11.2014 போராட்டம் வெல்லட்டும், வெல்லட்டும் என வாழ்த்துகிறோம்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

போராட்டம் வெற்றிவாகை சூட வாழ்த்துகிறேன்