Wednesday, 26 November 2014

BSNL ஊழியர் 27.11.14 இந்தியா முழுவதும் வேலைநிறுத்தம்.

நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள பிஎஸ்என்எல் 3ஆம் மற்றும் 4ஆம் பிரிவு ஊழியர்களின் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நவ.27 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டத்தில் உள்ளதாகக் கூறி நிர்வாகம் ஊழியர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக குறைந்தபட்ச போனசை அளிக்க மறுத்துவிட்டது.மருத்துவ அலவன்ஸ், எல்டிசி வசதிகளையும் நிறுத்திவிட்டது. இப்பொதுத்துறை நஷ்டமடையக் காரணம் ஊழியர்கள் அல்ல. கிராமப்புற தொலைபேசி சேவையை அளிப்பதற்கு பிஎஸ்என்எல் க்கு ஏற்படும் ஆண்டுச் செலவு ரூ.10,000 கோடியாகும். இதனை ஈடுகட்ட ஆண்டுதோறும் ரூ.5000 கோடியை 2005 வரை அளித்துவந்த மத்திய அரசு தற்போது அதனை முழுமையாக நிறுத்திவிட்டது. தரைவழி தொலைபேசி, பிராட்பேண்ட் மற்றும் மொபைல் தொலைபேசி சேவைகளை விஸ்திரிக்கவும் பராமரிக்கவும் தேவையான உபகரணங்களையும், நிதிஉதவியையும் அளிக்காமல் பிஎஸ்என்எல் நிறுவனத்தை தொடர்ந்து அரசு வஞ்சிக்கிறது.சேவையை மேம்படுத்த தனியார் நிறுவனங்களை எச்.யு..டபிள்யு.. என்ற சீன நிறுவனத்திடமிருந்து நவீன கருவிகளை வாங்கிக்கொள்ள அனுமதிக்கும் அரசு, அத்தகைய கருவிகளை பிஎஸ்என்எல் வாங்குவதற்கு அனுமதி மறுப்பதால் போட்டியை சமாளிக்க முடியாமல் நிறுவனம் தள்ளாடுகிறது.இச்சூழ்நிலையில் நான்காம்பிரிவு ஊழியர்களது சம்பள தேக்கம் கருணைஅடிப்படையிலான வேலை, எஸ்.எஸ்டி ஊழியர்களுக்கான சலுகைகள், பதவி உயர்வுகள், புதிதாக வேலைக்கு சேர்ந்தோருக்கான சம்பள முரண்பாடு பழைய ஊழியர்களுக்கான மற்றும் ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை தீர்க்கும்படி பிஎஸ்என்எல் தலைவருக்கு 26.05.2014 அன்று கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் மனு அளிக்கப்பட்டு பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னணியில் 27.06.2014 அன்று நடந்த பேச்சுவார்த்தையில் சில பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க நிர்வாகம்ஒப்புக்கொண்டது.ஆனாலும் இன்றுவரை அவை அமலாகவில்லை.
ஆகவே, கூட்டு நடவடிக்கைக்குழு 27.11.2014 அன்று வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படிநாடு முழுவதும் இவ்வேலை நிறுத்தம் எழுச்சியுடன் நடைபெறவுள்ளது. இந்தியா முழுவதும் பணிபுரியும் 1,86,000 ஊழியர்களும் இப்போராட்டத்தில் முழுமையாக பங்கேற்க உள்ளனர்.

No comments: