Friday, 14 November 2014

NOV-14 குழந்தைகள் தினம் இந்தியா முழுவதும் . . .

குழந்தைகள் தினம் இந்தியா முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, பாட்டுப்பாட்டு, நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வெள்ளை மனம் கொண்டவர்கள் குழந்தைகள். அவர்கள் விறுப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதாலேயே இறைவனுக்கு சமமாக ஒப்பிடப்படுகின்றனர். கள்ளமற்ற இந்த குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் மாதம் 20ம் தேதி சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் நவம்பர் 14 ம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. இயற்கையிலேயே குழந்தைகள் மீது அதிக பிரியம் கொண்டவர் பண்டித ஜவகர்லால் நேரு. அதன் காரணமாக அவரை நேரு மாமா என்று அனைவரும் அன்போடு அழைத்தனர். குழந்தைகள் மீது கொண்ட அளவுகடந்த பாசம் காரணமாகவே தனது பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுமாறு வலியுறுத்தினார் நேரு. இந்த தினத்தில் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களுக்கான கல்வி உறுதிநிலை குறித்து அரசு தரப்பில் அறிவுறுத்தப்படும். குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் ஆனால் குழந்தைகள் தினம் என்றால் என்பதையே அறியாமல் பல குழந்தைகள் உள்ளனர். இன்றும் பள்ளிக்கு செல்லாமல் தங்களின் உரிமைகளைப் பற்றி அறியாமல் எண்ணற்ற குழந்தைகள் வசித்து வருகின்றனர். குழந்தைகளுக்கு எதிரான கடத்தல், பாலியல் கொடுமை குற்றங்கள், தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்தாண்டு மட்டும், இத்தகைய வழக்குகள், 810 பதிவாகியுள்ளன. இது, அதற்கு முந்தைய, 2009ம் ஆண்டை விட, 27.8 சதவீதம் (634) அதிகம். குழந்தைகளுக்கு எதிராக; சிசுக் கொலை, குழந்தைகளை தொழிலாளர்களாக பயன்படுத்துவது, குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது, பாலியல் கொடுமை, கடத்தல், கொலை என, பல வகையான குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த மூன்றாண்டுகளில் குழந்தைகள் கற்பழிப்பு, பாலியல் கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்தாண்டு நடந்துள்ள, 203 சம்பவங்களில், அதிகப்படியாக, சென்னை மாநகரில், 22 வழக்குகளும், அடுத்ததாக, சேலத்தில், 19 வழக்குகளும் பதிவாகியுள்ளன. கடந்தாண்டில் நடந்த குழந்தைகளுக்கெதிரான குற்ற சம்பவங்களில், 1,029 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 613 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 129 பேருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. மற்றவர்கள் மீதான வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றை தடுக்க, கடுமையான சட்டங்கள், தண்டனைகள் இருந்தாலும், குடும்பப் பிரச்னைகள் போன்ற சமூக போக்கு மாற்றங்களால், இத்தகைய குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குழந்தைகளுக்கெதிரான குற்றங்களின் விளைவு பற்றியும் பெற்றோர் புரியும்படி எடுத்துச் சொல்ல வேண்டும்.அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அப்பொழுதான் உண்மையான குழந்தைகள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும்.
      நேரு அவர்கள் இந்திய நாட்டில் பொதுத்துறைகளை உருவாக்க P. ராமமூர்த்தி, K.T.K.தங்கமணி,போன்ற கம்யுனிஸ்ட் தலைவர்களின் உதவியுடன் செய்து முடித்தார். அதுமட்டுமல்ல, பொதுத்துறை நிறுவனங்களை  இந்திய நாட்டின் கோவில்கள் என வர்ணித்தார். ஆனால் இந்திய நாட்டை ஏற்கனவே ஆண்ட காங்கிரஸ் கட்சியும்சரி, அதற்கு மாற்றாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவோம் என மக்களிடம் பொய்யான வாக்குறுதியை கொடுத்து வாக்குகளை பெற்ற BJP கட்சியும் பொதுத்துறையை அன்றாடம் சிரழிக்க முற்படுகிறது என்பதுதான் எதார்த்தமாக உள்ளது. இந்த விதேசிகளிடம் இருந்து நமது BSNLஉள்ளிட்ட இந்திய பொதுத்துறை  நிறுவனங்களை  பாதுகாக்க இந் நாளில் சபதம் ஏற்போம்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

குழந்தைகளுக்கெதிரான குற்றங்களின் விளைவு பற்றியும் பெற்றோர் புரியும்படி எடுத்துச் சொல்ல வேண்டும்.அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
உண்மைதான் ஐயா
பாதுகாப்பான சூழலை உருவாக்கிக் கொடுப்பது நமது கடமையல்லவா, அரசின் கடமையல்லவா
நன்றி ஐயா