நமது BSNL நிறுவனம் மீண்டும் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்தியா முழுவதும் இலவச ‘ரோமிங்’ வசதியை அறிமுகம் செய்துள்ளது. 2013–ல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் இடையில் நிறுத்தப்பட்ட ‘ஸ்பெஷல் டேரிப் வவுச்சர்’ (STV) தற்போது நவம்பர் 1–ந் தேதி முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் இலவச ரோமிங் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வெளிமாநிலத்தில் இருந்து தொடர்பு கொண்டு பேசுவதற்கான கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. நொடிக்கு ஒரு ரூபாய் ஐந்து பைசா வசூலிக்கப்படும்.இது குறித்து BSNL. இயக்குனர் அனுபம் ஸ்ரீவத்சவா கூறுகையில், தேசிய அளவிலான இலவச ரோமிங் வசதி அனைத்து BSNL., GSM. செல்போன் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும். ஸ்பெஷல் டேரிப் வவுச்சர்கள் 90 நாட்கள் வரை கிடைக்கும்.இந்த திட்டம் நவம்பர் 1–ந் தேதி முதல் 2015 – ஜனவரி 29–ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றார்.
1 comment:
வாழ்த்தி வரவேற்க வேண்டிய அருமையான திட்டம்
வாழ்த்துவோம் வரவேற்போம்
Post a Comment