பிலாஸ்பூர்:சத்தீஸ்கரில், தவறான குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையால், 11 பெண்கள் பலியான மருத்துவமனையில், டில்லி, எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் நேற்று ஆய்வு நடத்தினர்; பாதிக்கப்பட்ட பெண்களிடமும் விசாரணை நடத்தினர். இதில், சரியாக கிருமி நீக்கம் செய்யப்படாத கருவிகளை பயன்படுத்தி, ஆபரேஷன் செய்தது தான் பெண்கள் பலிக்கு காரணம் என்பதுதெரியவந்துள்ளது.
பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் ரமண் சிங் தலைமையிலான, சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் அருகே உள்ள பென்டாரி என்ற கிராமத்தில், கடந்த 8ம் தேதி, மாநில அரசின் சார்பில், இலவச குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் அதில் பங்கேற்றனர்.வழக்கமாக, 40 பெண்களுக்கு தான், ஒரு முகாமில் அறுவை சிகிச்சை செய்யப்படும் நிலையில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதற்காக, ஒரே நாளில், 80க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இவ்வாறு அறுவை சிகிச்சை செய்யப்படும் பெண்களை, கட்டாயம், 24 மணி நேரம் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்ற போதிலும், 8ம் தேதி மாலையிலேயே பல பெண்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.அந்த பெண்களில் பலருக்கு, வயிற்று வலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், அருகில் உள்ள பிற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தனர். இவ்வாறு, 11 பெண்கள் இறந்தனர்; பலர், இன்னமும் மருத்துவ மனையில் உள்ளனர்.இது குறித்து அறிந்த மாநில நிர்வாகம், நான்கு டாக்டர்களை தற்காலிக பதவிநீக்கம் செய்து உத்தரவிட்டது; விசாரணைக்கும் உத்தரவிட்டது. நாட்டின் சிறந்த மருத்துவ நிறுவனமாக கருதப்படும், டில்லி, எய்ம்ஸ் மருத்துவமனை யில் இருந்து வரவழைக்கப்பட்ட டாக்டர்கள் குழு, சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டது. பாதிக்கப்பட்ட பெண்களிடமும் பரிசோதனைமேற்கொண்டது.
எதிர்க்கட்சிகள்வேலைநிறுத்தம்
*ஐந்து மணி நேரத்தில், 83 பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுஉள்ளது. சிகிச்சை அளித்த டாக்டர்களில் ஒருவர், ஏற்கனவேபணியிலிருந்துசஸ்பெண்ட்செய்யப்பட்டவர்.
*சரியாக கிருமி நீக்கம் செய்யப்படாத கருவிகளை பயன்படுத்தி, அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் தான், இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
*ஐக்கியநாடுகள்சபையும்,பெண்கள்இறப்புக்குகவலைதெரிவித்துள்ளது.
*மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்தை, எதிர்க்கட்சிகள் நேற்று நடத்தின.

No comments:
Post a Comment