இரண்டாம் கட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களாக பொதுத்துறை மேலும் பெரிய அளவில் தனியாருக்கு திறந்துவிடப்படும், காப்பீடு மற்றும் நிலச்சட்டங்கள் எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும் அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். தில்லியில் ஞாயிறன்று பத்திரிகையாளர்களிடம் அருண் ஜெட்லி பேசியபோது கூறியதாவது: நாட்டின் முன்னேற்றத்திற்கு பொருளாதாரச் சீர்திருத்தங்கள் எப்போதும் தடை படக்கூடாது என்பதில் பாஜக அரசு தெளிவுடன் இருக்கிறது. இதற்காக இரண்டாம் கட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் விரைவில் அமல்படுத்தப்படும். இரண்டாம் கட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களாக நாட்டின் பொதுத்துறைகள் இன்னும் பெரியதாகதனியாருக்கு திறந்து விடப்பட வேண்டும்.

சிலிண்டர்களுக்கான மானியங்கள் அளிப்பதைப் பொறுத்தவரை இரு நாட்களுக்கு முன்னதாக கூறியதையே உறுதிப்படுத்து கிறேன். வசதியுள்ளவர்களுக்கு மானிய விலையில் சிலிண்டர் அளிப்பதை ரத்து செய்வதற்கு சில எதிர்ப்புகளை நாங்கள் எதிர்கொள்வோம் என்று எங்களுக்கு தெரியும்.பொது விநியோக முறையைரத்து செய்வதைப் பொறுத்த வரை இதற்காக பிமல் ஜெயின் என்பவரின் தலைமையில் அமைக்கப்பட்ட செலவினங்கள் மேலாண்மை கமிஷன் இப்பிரச்சனையை ஆராய்ந்து வருகிறது. பொது விநியோக முறையில் வழங்கப்படும் உணவு, உரங்கள் மற்றும் எண்ணெய்க்காக அளிக்கப்படும் மானியங்களை குறைப்பதற்கும் இதனால் பட்ஜெட்டில் ஏற்படும் பற்றாக்குறையை சரி செய்யவும் அந்த கமிஷன் ஆராய்ந்து வருகிறது.
விரைவில் அந்த
கமிஷனின் பரிந்துரையின்படி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார். அருண் ஜெட்லி தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராகவும் உள்ளார்.
எப்.எம்.வானொலி
இத்துறையை விரிவுபடுத்து வது தொடர்பாக பத்திரிகையாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் மத்திய அரசு
800 எப்.எம்.வானொலி சேவை களுக்கு அனுமதி அளிக்கும் என்றுகூறியுள்ளார்.
No comments:
Post a Comment