Tuesday, 4 November 2014

வாகாவில் தற்கொலை படை தாக்குதல் . . .

இந்திய பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வாகாவில் ஞாயிறன்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.வாகா எல்லைப்பகுதியில் ஞாயிறன்று மாலை தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்குட்பட்ட பகுதியில் ஞாயிறன்று மாலை கொடி இறக்க நிகழ்ச்சி நடை பெற்றது. இராணுவ அணி வகுப்புடன் கூடிய நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் புறப்பட முற்படும்போது தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் அங்கிருந்த இரும்பு கேட் மீது மோதி தனது உடலில் கட்டி இருந்த வெடி குண்டுகளை வெடிக்கச் செய்தார். இதைத்தொடர்ந்து அங்கு இருந்த மக்கள் அலறியடித்து ஓடத்தொடங்கினர். அங்கிருந்த கடைகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து நாசமாகின. இந்த தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.மேலும் சுமார் 100 பேர் படுகாயம் அடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போதுள்ள சூழ்நிலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம் என்ற உளவுத்தகவலைத்தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் கோரிக்கையைத் தொடர்ந்து இந்திய பாகிஸ்தான் எல்லையில் 3 நாட்களுக்கு விழா எதுவும் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சீக்கியர் யாத்திரிகர்களுக்கு பாதுகாப்பு
இந்தியாவில் இருந்து பாகிஸ்தானின் வாகா ரயில் நிலையத்திற்கு வருகை தரும் சீக்கிய புனித பயணிகளுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அகதிகள் அறக்கட்டளை சொத்து வாரிய தலைவர் சித்திக்குல் பாரூக் தெரிவித்துள்ளார்.

No comments: