இந்தியா உருவாக்கிய மிகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளுள் ஒருவர், சி.வி. ராமன் ஆவார். அவரது முழு பெயர் சந்திரசேகர வேங்கட ராமன். அவரது படைப்புகளில் முன்னோடியான ஒளிச்சிதறளுக்கு, சி.வி. ராமன் அவர்கள் 1930 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். முழுமையாக இந்தியாவிலேயே படித்து நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய அறிஞர் என்ற பெருமைப் பெற்ற சர். சி. வி. ராமன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது கண்டுப்பிடிப்புகள் பற்றியறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு:சந்திரசேகர வேங்கட ராமன், தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் நவம்பர் 7, 1888 ஆம் ஆண்டு பிறந்தார். சந்திரசேகர் ஐயர் மற்றும் பார்வதி அம்மா அவர்களுக்கு இரண்டாவது குழந்தையாக பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்:சந்திரசேகர வேங்கட ராமன் அவர்களின் தந்தை கணிதம் மற்றும் இயற்பியலில் ஒரு பேராசிரியராக இருந்தால், அவர் வீட்டில் ஒரு கல்வி சூழலைக் கொண்டிருந்தார். அவர் 1902 ஆம் ஆண்டு, சென்னையிலுள்ள பிரெசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். 1904ஆம் ஆண்டு, பி.ஏ பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்று முதல் மாணவனாக திகழ்ந்த இவர், இயற்பியலுக்கான தங்கப்பதக்கதையும் பெற்றார். நிறைய மதிப்பெண்கள் வித்தியாசத்தில் 1907 ஆம் ஆண்டு எம்.ஏ பட்டம் பெற்றார்.
சி.வி. ராமனின் ஆராய்ச்சிகள்:இந்தியாவில் அந்த காலக்கட்டத்தில் விஞ்ஞானிகளுக்கு வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது. அதனால், 1907 ஆம் ஆண்டு, ராமன் அவர்கள் இந்திய நிதித் துறையில் சேர்ந்தார். அவரது அலுவலக நேரம் முடிந்த பிறகு, அவர் கல்கத்தாவில் அறிவியல் அபிவிருத்திக்கான இந்திய சங்கத்தின் ஆய்வகத்தில் அவரது பரிசோதனை ஆய்வை மேற்கொண்டார். அதே ஆய்வகத்தில் அவர் ஒலியியல் மற்றும் ஒளியியல் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார்.
விருதுகளும், அங்கீகாரங்களும்:1917 ல், கல்கத்தா பல்கலைக்கழகம் சி.வி.ராமன் அவர்களுக்கு இயற்பியலில் ‘சார் தரக்நாத் பாலித் பேராசிரியர்’ என்ற பதவியை வழங்கியது. அடுத்த பதினைந்து ஆண்டுகளாக அங்கு தங்கியிருந்தார். அங்கு அவர் இருந்த காலத்தில், அவரது ஒளியியல் மற்றும் ஒளி சிதறலுக்கான ஆராய்ச்சிப் பணி உலக அளவிலான அங்கீகாரத்தை பெற்றது. லண்டன் ராயல் சொசைட்டியால் அவர் 1924ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1929 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் பேரரசால் இவருக்கு “நைட் ஹீட்” என்ற பட்டமும், இங்கிலாந்து அரசியாரால் ‘சர்’ பட்டமும் அளிக்கப் பட்டது. 1930ல், தனது இயற்பியலுக்கான ஒளி சிதறல் ஆராய்ச்சிக்காக சர் சி.வி. ராமன் அவர்களுக்கு ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. பின்னர் இந்த கண்டுபிடிப்புக்கு “ராமன் விளைவு” என்று பெயரிடப்பட்டது.
பிறப் பணிகள்:1930ல் பெங்களூரில் புதிதாக நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கழகத்தில், சி.வி. ராமன் அவர்கள் இயக்குனராக சேர்ந்தார். பின்னர், இயற்பியல் பேராசிரியராக அங்கு இரண்டு வருடங்கள் பணியில் தொடர்ந்தார். சார் சி.வி.ராமன் நடத்திய சில ஆராய்சிகள்: சோதனை மற்றும் கோட்பாட்டு ஆய்வுகளான1947 ஆம் ஆண்டில், அவர் சுதந்திர இந்தியாவின் புதிய அரசாங்கத்தில் முதல் தேசிய பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1948 ஆம் ஆண்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், ஒரு வருடம் கழித்து, பெங்களூரில் ‘ராமன் ஆராய்ச்சி நிலையம்’ நிறுவி, அங்கு அவர் தனது மரணம் வரை பணிபுரிந்தார்.சர் சி.வி. ராமன் அவர்கள், நவம்பர் 21, 1970 அன்று இறந்தார்.Dr.சர்.சி.வி. ராமன் அவர்களின் நினைவை போற்றுவோம்...
1 comment:
சர் சிவி இராமன்அவர்களின் நினைவினைப் போற்றுவோம்
Post a Comment