
தனியார் மயம் அப்போது அவர் பேசுகையில், ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் ரயில் நிலையங்களில், விமான நிலையங்களை விட அதிக வசதிகள் இருக்க வேண்டும். இதற்காக ரயில் நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதன் முதற்கட்டமாக, 10 முதல் 12 ரயில் நிலையங்களை தேர்வு செய்து தனியாரின் உதவியுடன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார். சுதேசி பேசியவர்கள், விதேசியாகி இந்திய தேசத்தின் மக்கள் சொத்தான அனைத்து பொதுத் துறை நிறுவனங்களையும், அரசு துறைகளையும் இப்படி தனியார்களுக்கு தாரை வார்ப்பதை, தரணியில் உள்ள அனைவரும் ஒருசேர எதிர்த்து போரிடும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பது திண்ணம்.
No comments:
Post a Comment