Friday, 21 November 2014

அனைத்து தொழிற்சங்கம் மதுரையில் டிச.5-ல் ஆர்ப்பாட்டம்...

தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்தும்மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மதுரையில் அனைத்துத் தொழிற் சங்கங்கள் சார்பில் டிச. 5-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மதுரை நகர அனைத்து தொழிற்சங்கக் கூட்டம் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் எச்எம்எஸ் தொழிற்சங்கத் தலைவர் ஆர்.கேசவன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் தன்னிச்சையாக தொழிலாளர் நலச் சட்டங்களை நிர்வாகங்களுக்கு ஆதரவாக திருத்தம் செய்ய முயற்சிகள் மேற் கொண்டிருப் பதை கைவிட வலியுறுத்தி அகில இந்திய மத்திய தொழிற்சங்கங்கள் டிசம்பர் 5-ஆம் தேதி இந்தியா முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.அதனொருபகுதியாக மதுரையில் இந்த ஆர்ப்பாட்டத்தை ஆயிரக்கணக்கானோரை திரட்டி நடத் துவது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த இயக்கத்தில் சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ், ஐஎன்டியுசி, எல்பிஎப் மற்றும் பிஎம்எஸ் ஆகிய சங்கங்களைச் சேர்ந்த தொழிலா ளர்கள் திரளாக கலந்து கொள்வதென்றும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் வி. பாதர் வெள்ளை, கே..ராமச்சந்திரன் (எச்எம்எஸ்),எம்.நந்தாசிங், ஜெ.ராதா கிருஷ்ணன் (ஏஐடியுசி), ஆர்.தெய்வராஜ், எஸ். சந்தியாகு (சிஐடியு), கே.எஸ்.சி.அல் போன்ஸ்ராஜா, கருணாநிதி (எல் பிஎப்), கே.குருசாமி (ஐஎன்டியுசி) உள்ளிட்ட தலைவர் கள் கலந்துகொண்டனர்.

No comments: