Sunday 30 October 2016

31-10-16 மதுரை மாவட்ட பணி நிறைவு பாராட்டு விழா . . .


கேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டி மீண்டும் அமைக்கப்பட்டது...

Reconstitution of the Committee for  Redesignation of the  left out Non-Executives.
The four main Non-Executive cadres of RM, TM, Sr.TOA and TTA have already been re-designated. However, many Non-Executive cadres are still not re-designated. BSNLEU has been continuously demanding the Corporate Management to reconstitute the Redesignation Committee, consequent to the conducting of the 7th Membership Verification, and to undertake the task of rdesignating the left out cadres. As a result, Corporate Office has reconstituted the Committee
12-05-2016 அன்று நம் மத்திய சங்க முயற்சியால் STOA, TTA, TM, RM கேடர்களுக்கான பெயர் மாற்ற உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நம் மத்திய சங்க வலியுறுத்தலால் விடுபட்ட கேடர்களுக்கான பெயர் மாற்றம் செய்ய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் BSNLEU சார்பில் தோழர். P. அபிமன்யு , நமது  பொதுச் செயலர், தோழர் பல்பீர் சிங், நமது  அகில இந்திய தலைவர், தோழர் ஸவபன் சக்ரவர்த்தி ,நமது  துணைப் பொதுச் செயலர், ஆகியோரும், NFTE சார்பில் இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

OCT- 30 சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்கம் அவர்கள் நினைவு நாள் . .

.முத்துராமலிங்கதேவர்,
1908_
ம் ஆண்டு அக்டோபர் மாதம்30_ந்தேதிராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னை அடுத்தபுளிச்சுகுளம் என்ற கிராமத்தில் பிறந்தார்பெற்றோர்உக்கிரபாண்டியத் தேவர் _ இந்திராணி அம்மாள்பிறந்தஆறாவது மாதத்திலேயே தாயாரை இழந்த தேவர்பாட்டியின்ஆதரவில் வளர்ந்தார்1927_ம் ஆண்டில் முத்து ராமலிங்கதேவர் காங்கிரசில் சேர்ந்தார்சுதந்திரப் போராட் டத்தில்கலந்துகொண்டுசிறை சென்றார்வெள்ளைக்காரர்களைஎதிர்த்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படை திரட்டியபோது,அவருக்கு ஆதர வாக தீவிர பிரசாரம் செய்தார்.அப்போது 5ஆண்டு ஜெயில் தண்டனை அடைந்தார். 1948_ம் ஆண்டில்காங்கிரசை விட்டு விலகி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துவக்கிய பார்வர்டு"பிளாக்கட்சியில் சேர்ந்தார்முத்துராமலிங்க தேவர்நீண்ட காலம் சட்டசபை உறுப்பினராக இருந்திருக்கிறார். 1937_ம் ஆண்டுமுதுகுளத்தூர் தொகுதியில் இருந்து தமிழ் நாடு சட்டசபைக்கு காங்கிரஸ் சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்டார்பிறகு 1947_ம் ஆண்டுமீண்டும் தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.1952_ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் சட்டசபைக்கும்,பாராளுமன்றத்துக்கும் (2 தொகுதிகளில்காங்கிரசை எதிர்த்து போட்டியிட்டார்இரண்டிலும் வெற்றி கிடைத்ததுஅதில் பாராளுமன்றஉறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.பிறகு 1957_ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்நாடு சட்டசபைக்கு முதுகுளத்தூர்தொகுதியிலும்பாராளுமன்றத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியிலும் போட்டியிட்டார்இரண்டிலும் வெற்றி பெற்றுசட்டசபைஉறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.கடந்த 1962 பிப்ரவரி மாதம் நடந்த பொதுத்தேர்தலில்அருப்புக்கோட்டை தொகுதியில்இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்நேதாஜியும்முத்துராமலிங்க தேவரும் சகோதர பாசம் கொண்டிருந்தனர். 1939_ம் ஆண்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக நேதாஜி தேர்ந்து எடுக்கப்பட்டபோதுஅவர் வெற்றிக்கு தேவர்உழைத்தார்
கல்கத்தாவில் நடந்த விழாவுக்குதேவரை நேதாஜி அழைத்தார். "முத்து ராமலிங்கம்என் தம்பிஎன்று கூட்டத்தினருக்கு அறிமுகம்செய்தார்தேவரைக் கட்டித்தழுவி,"நான் வடநாட்டு போஸ்நீ தென்நாட்டு போஸ்என்று வாழ்த்தினார்1957 செப்டம்பர் மாதத்தில்ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடையே கலவரம் நடந்தது.அப்போது ஆதிதிராவிடசமூகத்தைச் சேர்ந்த இமானுவேல் கொலை செய்யப்பட்டார்இந்த வழக்கில்முத்துராமலிங்கதேவரும் குற்றம்சாட்டப்பட்டார்முடிவில்நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார்பத்தாம் வகுப்பு வரை படித்த தேவர்ஆங்கிலத்திலும்தமிழிலும்மணிக்கணக்கில் பேசக் கூடிய ஆற்றல் படைத்தவர்.தமிழ் நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்விடுதலைப்போராட்டத்தில் பல முறை சிறை சென்றார்அவர் வாழ்ந்த நாட்கள் 20,075. அதில் சிறையில் கழித்த நாட்கள் 4,000. ஜமீன் பரம்பரையில்பிறந்தாலும்எளிய வாழ்க்கை நடத்தினார். 33 கிராமங்களுக்கு சொந்தக்காரர் என்றாலும்வருமானத்தில் பெரும் பகுதியை ஏழைமக்களுக்காக செலவிட்டார்பொதுத்தொண்டு செய்வதை முழு நேரப்பணியாக மேற்கொள்ள விரும்பி திருமணம் செய்து கொள்ளாமல்துறவிபோல் வாழ்ந்தார்.

30.10.2016 தோழர்.பி.மோகன் நினைவுநாள்...

அருமைத் தோழர்களே !
 30.10.2016 மதுரைபாராளுமன்ற உறுப்பினர்  தோழர்பி.மோகன்
அவர்களின் 
நினைவுநாள்மதுரை மக்களின்அனைவரது அன்பை பெற்றவர்
 என்றுசொன்னால் அது மிகையாகாது.தோழர்.P.மோகன் என்று சொன்னால் எந்தஅரசியல் கட்சிகளுக்கும்எந்த சாதிமதம்எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவராக மதுரையை வளம் வந்த பெருமைமிகு 
தோழர்.பி.மோகன் ஆவார். 
மதுரை மண்ணின் மைந்தராக அனைவரயும் பெயர் சொல்லி அழைக்க கூடியஅளவில் மக்களோடு இரண்டற கலந்த தலைவன் தோழர்.P.மோகன் ஆகும்.நமதுபகுதியில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களுக்கு ஆதரவளித்துவாழ்த்திய அன்புத்தலைவர் அவர்எந்த பகுதிஊழியர்கள்மக்கள் போராடினாலும் அங்கு ஓடோடி வந்து குரல் கொடுத்த தலைவன்மதுரை மக்களின்முன்னேற்றத்திற்காகஅரசு மருத்துவமனை முன்னேற்றம் போன்றவற்றில் தனிக்கவனம் செலுத்திய மக்கள்தலைவர்செம்மொழிக்காக நாடாளுமன்றத்தில் ஓங்கி குரல் கொடுத்த உத்தமர் தோழர்.P.மோகன்ஆகும்.பாராளுமன்ற ஒதிக்கீடு நிதிதனை மக்கள் நலத் திட்டங்களுக்காகவே முழுக்க முழுக்க முன் நின்றுபணியாற்றிய பண்பாளர்.மாணவ பருவம் முதற் கொண்டு இறுதி
வரை தான் கொண்ட மார்க்சிய கொள்கையில்உறுதியாக நின்ற உயர்ந்த மனிதர் தோழர்.Pமோகன் 2009 ஆம் ஆண்டு-அக்டோபர் 30   நம்மை விட்டுப் பிரிந்த அன்புத்தலைவன் தோழர்மோகன்  மறைந்து
 இன்றோடு 7 ஆண்டுகள் உருண் டோடி  விட்டதுஉழைப்பாளிவர்க்கத்திற்காக தனது
 இந் நுயிரை ஈந்த அந்த தலைவன் விட்டுச் சென்ற பணிகளை நாம் தொடர்ந்து போராடிவெல்வோம் என இந் நாளில் சபதம் ஏற்போம்.

Thursday 27 October 2016

27-10-16 நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

அருமைத் தோழர்களே ! BSNL-லில் உள்ள 65000 டவர்களை, மக்கள் சொத்தான பொதுத் துறையின் டவர்களை தனியாக பிரித்து தனியார்மய படுத்தி, தனியார்க்கைகளில் ஒப்படைப் பதற்கான முயற்ச்சியை மத்தியில் ஆளும் மோடி அரசு திட்டமிடுவதை கைவிடக் கோரியும், மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்தும் BSNL-லில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் இந்திய நாடு முழுவதும் முதற்கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்திட அகில இந்திய FORUM-த்தின் அறைகூவலின் ஒரு பகுதியாக  மதுரை மாவட்ட BSNL  பொது மேலாளர் அலுவலகத்தில் 27-10-16 மதியம் 1 மணிக்கு சக்தியாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு AIBSNLEA சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர்.என். சீனிவாசன் தலைமை தாங்கினார்.  AIBSNLOA சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர். முருகன் ,  SNEA சங்கத்தின் மாநில உதவிச் செயலர் தோழர். சந்திரசேகர் ,     மற்றும்  மதுரை மாவட்ட FORUM கன்வீனரும் BSNLEU சங்கத்தின் மாவட்ட செயலருமான தோழர்.சி. செல்வின் சத்தியராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி உரை நிகழ்த்தினர். (அனைத்து சங்கங்கள் பங்கேற்ற இந்த ஆர்பாட்டத்தில்  NFTE மதுரையில் கலந்து கொள்ளாதது வருத்தத்திற்குரிய  விஷயமாகும்)
இறுதியாக BSNLEU மாவட்ட சங்கத்தின் தலைவர் தோழர். எ. பிச்சைக்கண்ணு அனைவருக்கும் நன்றி கூறி உரை நிகழ்த்தினார். தோழர்.G.K.. வெங்கடேசன்  ஆர்ப்பாட்டத்தில் விண்ணதிரும் கோஷங்களை எழுப்பினார்.
27-10-16 திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் காட்சிகள் . . .
27-10-16 பழனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சிகள் . . . 

டெல்லியில் காய்ச்சல்அடித்தால் .. கர்நாடகா ஊசி ! ?


Tuesday 25 October 2016

பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்களை நீக்கம் செய்ததை கண்டித்து ...

அருமைத் தோழர்களே ! சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் 11 ஒப்பந்த ஊழியர்களை திடீரென டெண்டர் மாறிவிட்டார் என்ற காரணத்தை சொல்லி வேலைநீக்கம் செய்யப்பட்டு  கடந்த செப்டம்பர் மாதம் முதற்கொண்டு அவதியுறும்  அந்த அப்பாவி 11 ஒப்பந்த ஊழியர்களை உடனடியாக பணிக்கு மீண்டும் எடுக்க கோரி தமிழகம் தழுவிய மாலை நேர தர்ணாவின் ஒரு  பகுதியாக மதுரை தல்லாகுளம், லெவல்-4 பகுதியில் BSNLEU + TNTCWU இரு மாவட்ட சங்கங்களின் தலைவர்கள் தோழர்கள் A. பிச்சைக்கண்ணு, K. வீரபத்திரன் ஆகியோர்கூட்டுத் தலைமையில்  மிகவும் சீறு சிறப்புமாக நடைபெற்றது.  தர்ணாவில் 18 பெண்கள் உட்பட நூற்று கணக்கானோர் கலந்து கொண்டனர்.
தர்ணா போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி BSNLEU + TNTCWU  இரு சங்கங்களின் மாவட்ட செயலர்கள் தோழர்கள் C. செல்வின் சத்யராஜ், N. சோணைமுத்து  இருவரும் விளக்கி உரைநிகழ்த்தினர் . அதனை தொடர்ந்து TNTCWU மாநில சங்க நிர்வாகி தோழர். அன்பழகன், மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள், வள்ளி, T.K.சீனிவாசன், S. சூரியன் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள். இறுதியாக மாவட்ட பொருளர் தோழர். R. சுப்புராஜ் நன்றி கூற தர்ணா போராட்டம் நிறைவுற்றது.

BSNL வளர்ச்சி பணியில் தொடர்ந்து BSNLEUஉறுப்பினர்கள்...

அருமைத் தோழர்களே ! BSNL வளர்ச்சி பணிகளில், தொடர்ந்து BSNLEU உறுப்பினர்கள் செயலாற்றி வருகிறார்கள் என்பதற்கு பல்வேறு உதாரணம் நாம் சொல்ல முடியும், அது சிம் கார்டு விற்பனையாக இருந்தாலும் சரி, இரண்டு நாள் மேளாவாக இருந்தாலும் சரி, பழனி கிளைத்தலைவர் தோழர் சாது சிலுவைமணி பில்லரை சரிசெய்ததாக இருந்ததாலும் சரி, அடுத்தபடியாக தற்போது, மதுரை கே.கே.நகர் கிளை அமைப்புச் செயலர் தோழர் வெங்கடராமன் பில்லர் சரி செய்ததை இங்கே பார்வைக்கு தந்துள்ளோம்...

மதியரசின் BSNL விரோத போக்கை எதிர்த்து 27-10-16 அனைத்து சங்க ஆர்ப்பாட்டம்...


BSNLEU-CHQ தலையிடு சம்பளம்&போனஸ் பட்டுவாடா...

Payment of PLI, together with salary, to be made on 27th and 28th of this month.
BSNLEU has been pressing the Corporate Management hard, for the payment of PLI before Deepawali. As per the information given by the GM (T&BFCI), Corporate Office, payment of PLI will be made along with the salary of this month. This payment will be made on 27th and 28th. Saturday will be holiday for the Corporate Office.
போனஸ் பட்டுவாடா, சம்பளத்துடன் இணைத்து 27.10.2016 மற்றும் 28.10.2016 தேதி களில் பட்டுவாடா செய்யப்படும் என நமது மத்திய சங்க தகவல் தெரிவித்துள்ளது.
தீபாவளிபண்டிகையைமுன்னிட்டுசம்பள பட்டுவாடா முன்தேதியிட்டு வழங்க வேண்டும் என நமது (BSNLEU-CHQ) மத்திய சங்கம் கோரியிருந்ததுநமது கோரிக்கை ஏற்கப்பட்டு, GM (T&BFCI) அதற்கான வழி காட்டுதலை வழங்கியிருப்பதாக மத்திய சங்கம் தகவல் தெரிவித்துள்ளது

சென்னையில் நடைபெற்ற தமிழ் மாநில செயற்குழு காட்சிகள்...


Sunday 23 October 2016

பணி நீக்கம் செய்யப்பட்ட தோழர்களை பணிக்கு எடுக்க வைப்போம்!

ஒப்பந்ததாரர் மாறிவிட்டார் என்ற காரணத்தை காட்டி தமிழக தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் 15 ஆண்டுகாலத்திற்கு மேல் பணியாற்றி வரும் 11 ஒப்பந்த தொழிலாளர்கள் 01.10.2016 முதல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடுமைக்கு எதிராக CGM அலுவலக மாவட்ட சங்கம் இரண்டு கட்ட போராட்டங்களை நடத்தியது. அதன் பின்னர் BSNLEU மற்றும் TNTCWU ஆகிய இரண்டு சங்கங்களின் சார்பாக தமிழகத்தில் அனைத்து கிளைகளிலும், 07.10.2016 அன்று சக்தி மிக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 14.10.2016 அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் மாலை நேர தர்ணா போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. GM(HR) உள்ளிட்ட அதிகாரிகள் 15.10.2016 அன்று நடைபெற உள்ள முத்தரப்பு கூட்டத்தில் சுமுக தீர்வு ஏற்பட்டுவிடும் என்று கூறி நமது போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்தனர். நல்லெண்ணத்தின் அடிப்படையில் நாமும் 14.10.2016 தர்ணா போராட்டத்தை ஒத்தி வைத்தோம். ஆனால் 15.10.2016 நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஒப்பந்ததாரர் வரவில்லை. நிர்வாகம் ஒப்பந்ததாரர் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் மூன்று ஊழியர்களை மட்டும் எடுக்க ஒத்துக் கொண்டதாகவும், மற்றவர்களை பணிக்கு எடுக்க மறுத்து விட்டார் என்று தெரிவித்து விட்டனர்நாம் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களும் பணிக்கு எடுப்பதை தவிர வேறு எந்த உடன்பாட்டிற்கும் வர இயலாது என்பதை மிகத் தெளிவாக தெரிவித்து விட்டோம். எனவே, 25-10-16 தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மாலை நேர தர்ணா நடத்துவது என்றும்,  நாம் ஏற்கனவே திட்டமிட்டபடி 10.11..2016 அன்று சென்னையில் உள்ள தமிழக BSNL தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு கண்டிப்பாக நடைபெறும் என  தமிழா மாநில சங்கம் அறிவித்துள்ளது.. எனவே 10.11..2016 அன்று நமது தோழர்களை பெருவாரியாக திரட்டி சென்னையை நோக்கி அணி திரள வேண்டும் என இரண்டு மதுரை மாவட்டசங்கங்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். பணி நீக்க கொடுமையினை எதிர்த்து ஆர்ப்பரிப்போம்!!! பணி நீக்கம் செய்யப்பட்ட தோழர்களை பணிக்கு எடுக்க வைப்போம்!!!