:உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் துவக்கம் முதலே அதிமுக அரசு பல்வேறுகுளறுபடிகளை செய்து வந்தது. மேயர், நகர்மன்ற தலைவர், பேரூராட்சித் தலைவர்ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறைமுகத் தேர்தல் கொண்டு வந்தது.அனைத்து கட்சிகளும் எதிர்த்தது. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படும் சுழற்சி அடிப்படையிலான இடஒதுக்கீடும் முறையாக, முழுமையாக செய்யப்படவில்லை. பழங்குடியினர், தாழ்த்தப்பட் டோருக்கான ஒதுக்கீடுகள்வெளிப்படைத் தன்மையோடு, விகி்தாச்சார அடிப்படையில் நடைபெறவில்லை. இந்தநிலையில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பும் கடும் எதிர்ப்புக்குஉள்ளானது. தேர்தல் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளிலேயே வேட்புமனுத்தாக்கல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளுக்கு உரிய கால அவகாசம் அளிக்கப்படவில்லை. இந்தநிலையில் தேர்தலை ரத்து செய்து சென்னை நீதிமன்றம்தீர்ப்பு வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. குறைபாடுகளை களைந்து உள்ளாட்சித்தேர்தலை ஜனநாயகப்பூர்வமாக நடத்த இந்த அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டுமென விரும்புகிறோம்.
No comments:
Post a Comment