Wednesday 30 September 2015

Tuesday 29 September 2015

T.M.நியமன கவுன்சிலிங் 3.10.15 . . .

அருமைத் தோழர்களே ! நமது மாவட்ட சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக, நமது மதுரை மாவட்டத்தில் மீண்டும் புதிய  T.M. நியமனத் திற்கான  கவுன்சிலிங்  எதிர்வரும் 3.10.15 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு, மதுரை G.M. அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கி றோம்.   இதற்கான அறிவிப்பை நமது மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித் துள்ளது.(G.M / MA .Lr.No: E9 / E/ TM/ HRD-I /2015-16 / 25 dt. 25.09.2015.) இக் கவுன்சிலிங் முடிந்த உடன் 8 பேருக்கான TM நியமன உத்தரவு வெளியிடப்படும். கவுன்சிலிங் வரும் தோழர்கள் அலுவலக அடையாள அட்டையுடன் குறித்த நேரத்தில் வருகையை உத்தரவதப்படுத்தவும். . . .

கார்டூன் . . . கார்னர் . . .இன்று உலக இருதய தினம்-காக்க 10 கட்டளைகள்...

இன்றைய இயந்திர கதியிலான வாழ்க்கை முறையில் இளம் வயதிலேயே மாரடைப்பு வருவது அதிகரித்து வருகிறது. இந்தியப் பாரம்பரிய உணவுகளை ஓரங்கட்டிவிட்டு, மேற்கத்திய உணவுகளான துரித உணவுகளையும் பதப்
படுத்தப்பட்ட உணவுகளையும் சாப்பிடத் தொடங்கிய பிறகே, இந்தியாவில் இருதய நோயாளிகள் அதிகரித்து வருகிறார்கள். இன்றைய நவீன தொழில்நுட்ப வசதிகள், நம் உடலுழைப்பைக் குறைத்து சோம்பேறிகளாக மாற்றுவதோடு மட்டுமன்றி உடல் பருமன், உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு எனப் பல நோய்களையும் தானம் செய்கின்றன. இளையசமூகத்தினர் இப்போதே விழித்துக்கொள்ளாவிட்டால், இன்னும் கால்நுாற்றாண்டில் உழைக்க வேண்டிய வயதில் உள்ளோர் அனைவரும், தங்கள் நேரத்தை மருத்துவச் 
சிகிச்சைக்கே அதிகம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.ரத்த அழுத்தம் காரணம் மாரடைப்பு ஏற்படுவதற்கு உயர் ரத்த அழுத்தம் ஒரு முக்கியக் காரணம். ரத்த அழுத்தம் 120-80 என்பது தான் நார்மல். இது 140-90 என்ற அளவைத் தாண்டக் கூடாது. அதேநேரம் 90-60 என்ற அளவுக்குக் கீழேயும் இறங்கி விடக்கூடாது. ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் உணவில் உப்பைக் குறைப்பது, ஊறுகாய், கருவாடு, சிப்ஸ், அப்பளம், வடாம் போன்ற உப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்துக் கொள்வது என்று உணவுப் பழக்கத்தைச் சரி செய்து கொண்டால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துங்கள் 
ரத்தத்தில் சர்க்கரை அளவு வெறும் வயிற்றில் 80 - 100, சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 120 - 140 என்று இருக்க வேண்டும். இந்த அளவுகள் மிகுந்தால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லை என்று பொருள். மற்றவர்களைவிட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 2 மடங்கு அதிகரிக்கிறது. ஆகவே சரியான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றியும் தேவையான மாத்திரை, இன்சுலின் போன்ற சிகிச்சைகளை எடுத்துக்கொண்டும், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வேண்டியது முக்கியம்.
கொழுப்பு கூடக்கூடாது மாரடைப்புக்கு வாய்ப்புள்ளவர்கள் வருடத்துக்கு ஒருமுறை ரத்தக் கொழுப்பு அளவுகளைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்கு மொத்தக் கொழுப்பு 200 க்கு குறைவாகவும் டிரைகிளிசரைட் கொழுப்பு 150க்கு குறைவாகவும் எல்.டி.எல். எனும் கெட்ட கொழுப்பு 100 க்கு குறைவாகவும் எச்.டி.எல். எனும் நல்ல கொழுப்பு 40 க்கு அதிகமாகவும் இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைக் கைக்கொண்டால் ரத்தக் கொழுப்பு சரியாகவே இருக்கும். உணவுப் பழக்கம் அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு மற்றும் சிறுதானியங்கள், பயறு வகைகள் ஓட்ஸ், துவரை, பட்டாணி, அவித்த கொண்டைக்கடலை, வெண்ணெய் நீக்கப்பட்ட பால், மோர், கீரைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள், தக்காளி, அவரை, வெண்டைக்காய், வெள்ளைப் பூண்டு, முருங்கை, புடலங்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், வாழைத்தண்டு வாழைப்பூ
பூசணிக்காய், முட்டைக்கோஸ், காலிபிளவர், புரோக்கோலி ஆகியவை இருதயம் காக்கின்ற உணவுகள்
அசைவம் சாப்பிடுபவர்கள் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சியையும், மீனையும் வேகவைத்து குழம்பாக்கிச் சாப்பிடலாம். பழங்களில் ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள், கொய்யா, மாதுளை, அன்னாசி நல்லது. காபிக்குப் 
பதிலாக கிரீன் டீ குடிக்கலாம். இவற்றுக்கு 'நோ' சொல்லுங்கள் பாமாயில், தேங்காய் எண்ணெய், வனஸ்பதி, முட்டையின் மஞ்சள் கரு, விலங்கின் இறைச்சி, தயிர், வெண்ணெய், பாலாடை மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகள், தேங்காய், முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, அப்பளம், வடை, பஜ்ஜி, போண்டா, பூரி, சிப்ஸ், சீவல், சமோசா, எண்ணெயில் ஊறிய, வறுத்த பொரித்த உணவுகளை ஓரங்கட்டுங்கள். செயற்கை இனிப்புகள், நொறுக்குத் தீனிகள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் விரைவு உணவுகள் ஆகியவற்றை ஒதுக்கிவிடுங்கள். மதுவுக்கும் 'நோ' சொல்லுங்கள்.
கொழுப்பு அமிலங்கள் சரியான அளவில் கிடைப்பதற்கு பலவித எண்ணெய்களைத் தேர்ந்தெடுத்து அளவோடு பயன்படுத்தலாம்எடுத்துக்காட்டாக உணவைச் சமைப்பதற்கு சூரியகாந்தி எண்ணெய், வறுப்பதற்குக் கடலை எண்ணெய், தாளிக்க நல்லெண்ணெய் என்று வாரம் ஒருமுறை சுழற்சி முறையில் பயன்படுத்தினால் கொழுப்பு அமிலங்கள் மிகாது இருதயத்துக்கு நல்லது.
உடல் எடை முக்கியம் உடல் எடை சரியாக இருக்கிறது என்று சர்டிபிகேட் தருவது 'பாடி மாஸ் இன்டெக்ஸ்' இது 19 - 24 இருந்தால் உடல் எடை சரி. 25 - 29 இருந்தால் அதிக உடல் எடை; 30 -- 35 உடற்பருமனைக் குறிக்கும். 36 - 39 மோசமான உடற்பருமன். பெரும்பாலோருக்குச் சரியான உணவுமுறை மற்றும் முறையான உடற்
பயிற்சிகள் மூலமே உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள முடியும்.தினமும் 45 நிமிடங்கள் உடற்பயிற்சிக்காக ஒதுக்க வேண்டியது முக்கியம். நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், டென்னிஸ், கைப்பந்து, கூடைப் பந்து, இறகுப் பந்து போன்ற ஏரோபிக் பயிற்சிகள் இருதயத்துக்கு நல்ல பாதுகாப்பைத் தரும்.
புகைபிடிக்காதீர்கள் புகை பிடிப்பதை உடனே நிறுத்துங்கள். புகையிலையில் உள்ள நிகோடின் ரத்தக்குழாய்களைச் சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரித்து இதயத்தைப் பாதிக்கும். புகைபிடிப்பவர் வெளியிடும் புகையை அருகில் உள்ளவர்கள் சுவாசித்தால் அவர்களுக்கும் இந்தக் கெடுதல் ஏற்படும்.
உறக்கம் குறைந்தால் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்றவை அதிகரிக்கும். அது இருதயத்தைப் பாதிக்கும். தினமும் குறைந்தது 6 மணி நேரமாவது நிம்மதியாக உறங்குங்கள். மன அழுத்தம் குறைய, மாத்திரை, மருந்துகளை நம்புவதைவிட தியானம் செய்வதும், மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட யோகப் பயிற்சிகளைப் பின்பற்றுவதும் மிகவும்
நல்லது.

Monday 28 September 2015

செப்-28, மாவீரன் பகத் சிங் பிறந்த தினம் . . .


நான் பயங்கரவாதி அல்ல... புரட்சிக்காரன் -  பகத்சிங் 1931 பிப்ரவரி 2 அன்று எழுதப்பட்ட இந்த ஆவணம், இந்தியாவில் உள்ள இளம் அரசியல் ஊழியர்களுக்கான வழிகாட்டியாகும். அப்போது நாட்டில் இருந்த நிலைமைகளைத் துல்லியமாகப் பகுப்பாய்வு செய்து, இறுதியில் அவர் இளைஞர்களை, மக்கள் மத்தியில் வேலை செய்திட, தொழிலாளர்களை - விவசாயிகளை அணிதிரட்டிட, மார்க்சிய சிந்தனையைத் தழுவிட, கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டி வளர்த்திட அறிவுறுத்தினார். பகத்சிங் தூக்கிலிடப்பட்டபின், இந்த ஆவணம் மிகவும் சிதைக்கப்பட்ட வடிவத்தில் பிரசுரமானது. சோவியத் ஒன்றியம், மார்க்ஸ், லெனின், கம்யூனிஸ்ட் கட்சி போன்ற வார்த்தைகள் மிகவும் எச்சரிக்கையாக நீக்கப்பட்டிருந்தன. பின்னர், இந்திய அரசாங்கம், 1936இல் ரகசிய அறிக்கைகள் ஒன்றில் இதனை முழுமையாகப் பிரசுரித்தது. லக்னோவில் உள்ள தியாகிகள் நினைவு மற்றும் விடுதலைப் போராட்ட ஆய்வு மையத்தில் அதன் நகல் ஒன்று பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நமது BSNLEU தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை...

அருமைத் தோழர்களே ! எதிர்வரும் 06.10.15 போனஸ் ஆர்பாட்ட  அறைகூவல் குறித்து அகில இந்திய FORUM அறிவித்துள்ளது பற்றி நமது BSNLEU தமிழ் மாநில சங்கம்  சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது ... அதனை காண இங்கே கிளிக் செய்யவும்.

Saturday 26 September 2015

26.09.15 நடைபெற்ற TNTCWU மாவட்ட செயற்குழு கூட்டம்...

அருமைத் தோழர்களே! 26.09.2015 அன்று மதுரை மாவட்ட ஒப்பந்த ஊழியர்களின் TNTCWU மதுரை மாவட்ட சங்கத்தின்  செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவர்   தோழர். K வீரபுத்திரன் தலைமையில் மிகவும் சீரும் சிறப்புமாக, மதுரை  BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மறைந்த தலைவர்கள், தோழர்கள் P. முருகேசன், D.J.J.பெத்தேல் ராஜ் ஆகியோருக்கு செயற்குழு அஞ்சலி செலுத்தியது...
அதன்பின், செயற்குழுவின்  நோக்கம், ஆய்படு பொருள் மீதானவை குறித்தும் TNTCWU மாவட்ட செயலர் தோழர்.N. சோணைமுத்து விளக்கினார். எதிர்வரும் அக்டோபர் 3, 4 தேதிகளில் , நாகர்கோவிலில் நடை பெற உள்ள ஒப்பந்த ஊழியர்களின் அகில இந்திய மாநாடு, அதனையொட்டி உள்ள கடமைகள் குறித்தும், BSNLEU மதுரை மாவட்ட செயலர் தோழர். S.சூரியன் துவக்கவுரை நிகழ்த்தினார்.

ஆய்படு பொருளின் விவாதத்தில் கிளைச் செயலர்களும், மாவட்ட சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.  அகில இந்திய மாநாட்டிற்கு சார்பாளர்களும், தீர்மானங்களும்முடிவு செய்யப்பட்டது. மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள், அன்பழகன், ஜான் போர்ஜியா, சந்திரசேகர் ஆகியோர் வாழத்துரை வழங்கினர். இறுதியாக மாவட்ட பொருளர்  தோழர். R. சுப்புராஜ் நன்றி கூற செயற்குழு இனிதே நிறைவுற்றது.

Thursday 24 September 2015

அரசு, தனியார் ஆரம்பப்பள்ளிகளில் தாய்மொழியே பயிற்று மொழி

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தாய்மொழி தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொறடா கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.பேரவையில் புதனன்று (செப். 23) அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது கே.பாலகிருஷ்ணன் பேசியது வருமாறு:தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து சுமார் 1200 பள்ளிகள் தொடர்ந்து நடத்த முடியுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. மொத்தமுள்ள 37 ஆயிரத்து 141 அரசுப்பள்ளிகளில் 55 லட்சத்து 40 ஆயிரத்து 425 மாணவர்கள் படிக்கின்றனர்.
அதேசமயம் 11 ஆயிரத்து 658 தனியார் பள்ளிகளில் 46 லட்சத்து 55 ஆயிரத்து 270 மாணவர்கள் படிக்கின்றனர். அதாவது அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் குறைவாகவும், தனியார் பள்ளிகளில் அதிகமாகவும் படிக்கின்றனர்.நடப்பாண்டு உயர்நிலை பள்ளி மாணவர் சேர்க்கை விகிதம் அரசுப்பள்ளிகளில் 36.6 விழுக்காடாகவும், தனியார் பள்ளிகளில் 43.75 விழுக்காடாகவும் உள்ளது. மேல்நிலைப் பள்ளியை பொறுத்தவரை அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 37 விழுக்காடாகவும், தனியார் பள்ளிகளில் 48 விழுக்காடாகவும் உள்ளது.அரசுப்பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள், கழிப்பிடங்கள் பராமரிக்கப்படாதது, தண்ணீர் வசதி இல்லாதது போன்றவற்றால் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து, தனியார் பள்ளிகளில் அதிகரித்து வருகிறது.
அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆங்கில பயிற்று மொழி வகுப்புகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக அமைச்சர் கூறுகிறார். இதன்மூலம் ஆரம்ப பள்ளிகளில் தமிழே இல்லாத நிலை உருவாகும். கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை தாய் மொழி தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் செல்வதை தடுக்கவும், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நிலையை அரசு உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது ..வேலு (திமுக), ஆறுமுகம் (சிபிஐ), அஸ்லாம் பாஷா (மமக) ஆகியோரும் பேசினர்.இவற்றிற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் உள்ளதாலும், உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாலும், 14 வகையான நலத்திட்டங்கள் வழங்குவதாலும், மாணவர் இடைநிற்றல் குறைந்து, சேர்க்கை விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்றார்.

Wednesday 23 September 2015

மதுரையின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பாலப்பணிகளை முடித்திடுக முதல்வரிடம் இரா.அண்ணாதுரை MLA கோரிக்கை.

மதுரை மாநகர மக்களின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் இரா. அண்ணாதுரை கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அவர் மனு ஒன்றை கொடுத்தார்.அதில், யானைக்கல்லிலிருந்து - பெரியார் பேருந்து நிலையம் வரை பறக்கும் பாலம் 2012 டிசம்பரில் அறிவிக்கப்பட்டது. மதுரை மேலக்கால் சாலையில் துவரிமான் மற்றும் பரவையை இணைக்க வைகை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைப்பது பற்றி 2013-14ல் அறிவிக்கப்பட்டது.
வைகை ஆற்றின் இடதுபுறம் குருவிக்காரன் சாலை - பி.டி.ஆர். சாலையை இணைக்கும் வகையில் சாலை அமைத்து மேம்பாடு செய்ய 2013-14ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தெற்குவாசல் பாலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக சிந்தாமணி சாலையில் மேம்பாலம் கட்டுவது என்று 2013-14ல் அறிப்பு வெளியானது.கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பரில், காளவாசல் பாலம் கட்டுவதற்கான ஆய்வுப்பணிகள் முடிக்கப்பட்டு அதற்கான டெண்டர் விடப்படாமல் உள்ளது. உடனே டெண்டர் விட்டு பாலம் கட்டும் பணி துவக்க வேண்டும்.மேலும் அறிவிக்கப்பட்ட சில பாலங்களுக்கு நில ஆர்ஜிதப் பணியை விரைந்து முடித்து கட்டுமானப்பணிகளை துவக்க வேண்டும். இப்பணிகளை விரைந்து துவக்கி முடிக்கப்பட்டால் மதுரை மாநகர மக்களின் நீண்டகால பிரச்ச னையான போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உதவியாக அமையும்.இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.