Friday, 18 September 2015

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வில் மாணவர்கள்.

இன்று செப்டம்பர்-18,உலக தண்ணீர் தினம். இந்நாளில் காவிரி மாசடைவதைத் தடுக்க விழிப்புணர்வு மற்றும் சேவைப் பணியில் ஈடுபட்டுள்ள கல்லூரிமாணவர்கள்.
திருச்சியின் அடையாளங்களில் ஒன்றான காவிரியாற்றில் தினம் தோறும் கொட்டப்படும் குப்பைகள், ஆற்றில் விடப்படும் பிளாஸ்டிக், துணிகள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள், கரையோரங்களில் இருந்து கலக்கும் கழிவுகளால் பெருமளவில் மாசடைந்து வருகிறது. இதைத் தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தண்ணீர் அமைப்பும், தன்னார்வ மாணவர்களும் முயற்சிசெய்துவருகின்றனர்
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ள இந்த தூய்மைப் பணி ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 30 மாணவர்கள் மற்றும் தண்ணீர் அமைப்பினர், சுமார் ஒரு டன் எடையுள்ள குப்பை,கழிவுகளைஅகற்றியுள்ளனர்
இந்த தூய்மைப் பணி திருச்சிக்கு மட்டுமல்ல, காவிரி பாய்ந்தோடும் அனைத்து இடங்களிலும் கட்டாயம் என்கிற பொறுப்புணர்ந்து பொதுமக்கள் செயல்பட வேண்டும் என்கிறார்கள் சூழலியல் செயற்பாட்டாளர்கள்.

No comments: