Thursday, 10 September 2015

2ம் உலகப்போரின் 76வது ஆண்டு நினைவு நாள் திரிபுராவில் மாபெரும் அமைதிப் பேரணி வீதிகளில் நடந்து சென்ற முதலமைச்சர் மாணிக் சர்க்கார்.

இரண்டாம் உலகப்போரின் 76வது ஆண்டு நினைவு நாளையொட்டி திரிபுராவில் `போருக்கு எதிரான மாபெரும் அமைதிப் பேரணிமுதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையில் நடைபெற்றது. கடந்த 7ம்தேதியன்று திரிபுராவில் 2ம் உலகப்போரின் 76வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு போருக்கு எதிராக 25 ஆயிரம்பேர் பங்கேற்ற பிரம்மாண்டமான அமைதிப்பேரணி நடைபெற்றது. இந்தப்பேரணியில் மாநில முதல்வர் மாணிக் சர்க்காரும் அமைச்சர்களும். பொதுமக்களும் இணைந்து சாலைகளில் நடந்து சென்றனர். அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து தரப்பிலிருந்தும் கலந்து கொண்டனர். தலைநகரான அகர்தலாவில் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் அமைதிப்பேரணிகள் நடைபெற்றன.
அகர்தலாவில் நடைபெற்ற பேரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பிஜன்தர், மத்தியக்குழு உறுப்பினர்களான கௌதம் தாஸ், பாதல் சௌத்ரி மற்றும் சங்கர் தத்தா எம்.பி., ஜர்ன தாஸ் பைதியா மற்றும் இடதுசாரிக்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இப்பேரணியில் வெளிநாட்டினரும் மாற்றுத் திறனாளிகளும் அமைதிக்காக உணர்வுப்பூர்வமாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 2ம் உலகப்போர் 1939 செப்-1ம்தேதி போலந்தில் ஜெர்மானியப் படைகளின் ஆக்கிரமிப்பில் தொடங்கியது. 1945ல் கோடானுகோடி மக்களின் இன்னுயிரை ஈந்து பாசிச ஹிட்லரின் படை களிடமிருந்து இந்த உலகைக் காத்தது மகத்தான சோவியத் ஒன்றியம். அதைத் தொடர்ந்து போர் நிறைவுபெற்றது.

No comments: