Sunday 6 September 2015

மதுரையில் BSNL ஒப்பந்த ஊர்தி ஓட்டுனர் சங்கம் உதயம்.


அருமைத் தோழர்களே ! நமது BSNL-லில் பணிபுரியும் ஒப்பந்த ஊர்தி ஓட்டுனர்களின் சங்க அமைப்பு கூட்டம் 06.09.15 அன்று மதுரை BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில் தோழர் C. செல்வின் சத்தியராஜ் தலைமையில், தோழர் S. சூரியன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மதுரை தொலை தொடர்பு மாவட்டத்தில் பணிபுரியும் ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக CITU மாவட்ட செயலர் தோழர். R.தெய்வராஜ், CITU வேன் - டாக்சி -டெம்போ தொழிலாளர் சங்க மாவட்ட செயலர் தோழர்.S.பாண்டியராஜ் ஆகிய இருவரும் கலந்து கொண்டு வழிகாட்டினர். தலைவர், செயலர், பொருளர் முறையே, K.ஜீவா, R.ஜோதி சுப்பிரமணி, R.வெங்கடேஷ் உள்ளிட்ட 15 நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தோழர்கள்,K.வீரபத்திரன்,N.சோனைமுத்து ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி உரையாற்றினர். இறுதியாக புதிய செயலர் R.ஜோதி சுப்பிரமணி நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

No comments: