Saturday, 19 September 2015

JTO தேர்வு விதி - திருத்தங்கள் ஏற்கப்பட்டுள்ளது.

JTO RR is approved by the BSNL Board.
BSNL Board meeting held today, on 18.09.2015 approved the JTO RR amendments. With this amended JTO RR, service condition is reduced to 5 years from 7 years. The officiating JTOs will be regularized as a one time mesure. It may be recalled that the RR was pending before the BSNL Board for approval for more than one year. The CHQ met the Director (HR), on 8th September, 2015 and requested for approval of the RR. Finally, the RR is approved. Congratulations !!
18.09.2015, நடைபெற்ற BSNL வாரிய கூட்டத்தில் ( BSNL Board Meeting ) JTO ஆளெடுப்பு விதியில் (Recruitment Rules ) நாம் கோரியிருந்த திருத்தங்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளன.இலாகா போட்டி தேர்வு மூலம் JTO பதவி உயர்வு பெற வேண்டும் என்றால், 10 ஆண்டுகள் சேவை முடித்திருக்க வேண்டும் என்ற விதியை கடுமையாக போராடி 7 ஆண்டுகளாக முன்பே குறைத்தோம்இருப்பினும் , நமது நீண்ட நாள் கோரிக்கையான, "5 ஆண்டுகள் சேவை தகுதி" என்பதை அடைய பல கட்ட இயக்கங்கள் நடத்தினோம்.  சென்ற 08.09.2015 அன்று கூட, ஓர் ஆண்டுக்கு மேலாக  கிடப்பில் உள்ள இந்த கோரிக்கையை விரைவில் தீர்க்க வேண்டும் என மனிதவள இயக்குனரை சந்தித்து, கடுமையாக நமது மத்திய சங்கம் வாதிட்டது .  அதன் பலனாக, 18.09.15  நடைபெற்ற BSNL வாரிய  கூட்டத்தில் நமது கோரிக்கை ஏற்கப்பட்டு, 7 ஆண்டுகள் சேவை தகுதி என்பது 5 ஆண்டுகளாக குறைக்க பட்டுள்ளது.மற்றுமொரு கூடுதல் மகிழ்ச்சி என்ன வென்றால்நீண்ட  நாட்களாக தற்காலிக  JTO பதவி  வகிக்கும் நமது மூத்த TTA தோழர்களுக்கும்  (Officiating JTOs ) நிரந்தர JTO பதவி பெற ஒப்புதல் கிடைத்துள்ளது நமது வாழ்த்துக்கள். மிக நீண்ட நாள் கோரிக்கையை தொடர் முயற்சி  மூலம் கிடைக்கச் செய்த நமது BSNLEU மத்திய சங்கத்திற்கு நமது நன்றிகள் உரித்தாகட்டும்.

No comments: