உலகில் அமைதியை வலியுறுத்தியும், நாடுகளிடையே போர் ஏற்படுவதை முற்றிலும் தடுக்கும் விதத்திலும் ஐ.நா., சார்பில் செப்., 21ம் தேதி, உலக அமைதி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
1981ல் முதன் முதலாக தொடங்கப்பட்ட இத்தினம், உலகில் வன்முறை அதிகரிப்பதை தவிர்த்து, அமைதி நிலவ, ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
அமைதி என்பதற்குப் பல அர்த்தங்கள் இருக்கின்றன. தற்காலத்தில் அமைதி என்பது, பகை இல்லாத நிலையைக் குறிக்கிறது. சர்வதேச அளவில் போர் இல்லாத நிலையையும் குறிக்கிறது.
மகாத்மா காந்திஜியின் கருத்துப்படி, அமைதி என்பது வன்முறை இல்லாமையை குறிக்கும்.
உலகின் சகல முன்னேற்றத்திற்கும் அடிப்படையானது சமாதானம்.
No comments:
Post a Comment