Saturday, 19 September 2015

நினைவில் நிற்கும் செப்டம்பர் 19 தியாகிகள் தினம் . . .

அருமைத்தோழர்களே !தபால் தந்திரயில்வேபாதுகாப்பு பிரிவு ஊழியர்கள் இணைந்து 1968,செப்டம்பர்  19 அன்று நடத்திய  
ஒரு நாள்வேலை நிறுத்தம்தான் தியாகிகள்தினமாகக் கொண்டாடப்படுகிறது.வரலாற்றுச் சிறப்புமிக்க
இவ்வேலைநிறுத்தத்தின் கோரிக்கைகள்
      *தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம் அளித்திட வேண்டும்.
      * கிராக்கிப்படியை சம்பளத்துடன் இணைத்திட வேண்டும்.
      *DA FORMULA மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
இதைஅறிவித்து வேலைநிறுத்தம் துவங்குவதற்கு முன்னமேயே, தலைவர்களைக் கைது 
செய்யும்நடவடிக்கையை மத்திய அரசு துவக்கிவிட்டதுடெல்லியில் உள்ள அனைத்து
 P&T நிர்வாகபகுதிகளில்  18 ம் தேதிகாலை 11 மணிக்கே வேலை நிறுத்தம் துவங்கி விட்டது.
டெல்லியில்மட்டும் 1650 P & T ஊழியர்களும் 350 மற்ற பிரிவு ஊழியர்களும் கைது ஆனார்கள்.
 P &Tதோழர்கள்  4000 பேர் உள்ளிட்ட 10000 பேர் கைது செய்யப்பட்டனர்.  
வேலை நிறுத்தத்தில் 280000 பேர் கலந்து கொண்டனர் . 140000 ஊழியர்கள்.கைதாகினர்.  8700 
பேர்சஸ்பென்ட்செய்யப்பட்டனர்.இதில்P&Tதோழர்கள்3756பேர்.44000தற்காலிகஊழியர்களை
Termination செய்ய நோட்டிஸ்கொடுக்கப்பட்டது. இப்படி பட்ட அடக்குமுறை எந்த ஒரு 
ஜனநாயகநாட்டிலும்  இது போன்ற கடுமையானபழிவாங்கல் நடவடிக்கை ஒரு நாள் 
வேலை நிறுத்தத்தில் நடைபெற்றதில்லை
பிகானிர்பதான்கோட்பொங்கைகான் ஆகியவிடங்களில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு
 9 ரயில்வே தொழிலாளிகள்பலியானார்கள்பல இடங்களில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளும்
வீசப்பட்டன.கூட்டு நடவடிக்கைக் குழு அரசிடம் பழிவாங்கலைக்கைவிடக்கோரியும் 
அசையாததால் விதிப்படி வேலை போராட்டத்தைதுவங்கியது.
இந்த எழுச்சிமிக்க போராட்டம் தொழிற்சங்கங்களை எல்லாம் ஒன்று படுத்தஉதவியதுதொழிலாளர்
சக்தியை அரசும் உணரத் துவங்கியது.எதிர்காலப்போராட்டங்களுக்கு உந்து சக்தியாக விளங்கிய
 செப் 19 போராட்டதியாகிகளுக்கு நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம்  வீர வணக்கத்தை
உரித்தாக்குகிறது.
செப் 19-போராட்ட தினமும் தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன் 47வது ஆண்டான 
இந்த செப்டம்பர்-19  காலகட்டத்தில் BSNL அழிக்க மத்திய BJP அரசும் கார்ப்பரேட் கம்பனிகளும் கைகோர்த்துள்ளன. என்வே FORUM மற்றும் JAC அமைப்புகள் பல போராட்ட அறைகூவல்களை விடுத்துள்ளன.செப்டம்பர்-19 தியாகிகளால் நம் இயக்கம் வளர்ந்துள்ளது 
எனபதை நினைவில்
கொண்டு நாமும் BSNL பாதுகாக்க போராட்ட பதாகையை உயர்த்திப் பிடிபோம்.

 ஒன்றுபடுவோம்போராடுவோம் !! வெற்றி பெறுவோம்!!!

No comments: