Monday, 21 September 2015

வருந்துகிறோம் . . . கண்ணீர் அஞ்சலி . . .

அருமைத் தோழர்களே ! அனைவராலும் அன்பாக "பெத்தேல் " என அழைக்கப்படும் அருமைத் தோழர் " D.J.J.பெத்தேல் ராஜ்" இன்று 21.09.15 மதியம் 3 மணிக்கு இயற்கை எய்தி விட்டார் என்பதை மிக, மிக வருத்தத் துடன் தெரிவித்துக் கொள்கிறோம். K.G.போஸ் அணியை  கட்டுவதில் முன்னின்ற தலைவர்களில் இவரும் ஒருவராக இருந்து தமிழகம் முழுவதும் சென்று பணியாற்றியவர்.தொழிற்சங்க செயல்பாட்டிற்காக    நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டு, பாண்டிச் சேரியில் இருந்து பழனிக்கு மாற்றப்பட்டார். மதுரை மாவட்டத்தில் K.G.போஸ் அணி முன்னணி படையாக வளர்வதற்கு அரும்பாடு பட்டவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருதய சிகிச்சை செய்து நலமுடன் இருந்து வந்தார். தற்போது, மீண்டும் இருதய சிகிச்சை கடந்த வாரம் சென்னையில் செய்யப்பட்டது. அதற்குப் பின் அவருக்கு இருதயம் சரியாக இயங்குவதாகவும். கிட்னி செயல்இல்லாமல் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அதன் பின் சிகிச்சை பலனின்றி   தோழர்.  D.J.J.பெத்தேல் ராஜ்"  இயற்கை எய்திவிட்டார். அன்னாருக்கு நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் அஞ்சலியை உரித்தாக்குகிறது.
இரங்கல் கூட்டம்
தோழர்.D.J.J. பெத்தேல் ராஜ் அவர்களுக்கு 22.09.15 காலை 11.30 மணிக்கு மதுரை G.M அலுவலகத்தில் அஞ்சலி கூட்டம் நடைபெறும். தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டுகிறோம்....
--- BSNLEU மதுரை மாவட்ட சங்கம். 

8 comments:

Unknown said...

அதிர்ச்சி அடைந்தேன். ஆழ்ந்த இரங்கல்.

புதுவை செல்வம் said...

My deep condolences, Com. Bethel is not only the tool to build
KG Bose faction in Madurai. His contributions to
Change the face of entire south district unions is valuable and memorable.

ESWARAN.A said...

ஆழ்ந்த வருத்தங்கள்..

Unknown said...

ஆழ்ந்த இரங்கலை தொிவித்து கொள்கிறேம்

Unknown said...

ஆழ்ந்த இரங்கலை தொிவித்து ஆன்மா அமைதியடைய பிராா்த்திக்கும்
ராஜாமணி.P

Unknown said...

இவரோடு சங்கப்பணி ஆற்றியவன் என்ற முறையில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். பேச்சாற்றல், கவிதை, நட்பு, தோழமை என்று பல நல்ல பரிமாணங்களில் தமிழகம் முழுவதுமே அறியப்பட்டவர்.
ராமானுஜம். G., சென்னை

Unknown said...

Our hearty Condolences.A dedicated LEADER.

BADRINATH said...

Condolences to his family