Friday 30 September 2016

நமது BSNLEU மத்திய சங்க செய்தி ...

2014-2015 ம் ஆண்டு போனஸ் ரூ. 3000 வழங்க, 28.09.2016 அன்று கூடிய நிர்வாக குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்த கட்டமாக, வாரிய குழு (BOARD) கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, பட்டுவாடா உத்தரவு வெளியிடப்படும்.
Image result for news flash
GPF பட்டுவாடாவிற்கு தேவையான நிதியை, ஆயுத பூஜைக்கு முன்பு வழங்க கார்ப்பரேட் அலுவலகம், நமது சங்கத்திற்கு உறுதி வழங்கியுள்ளது. (குறிப்பு: தமிழகத்திற்கு 24 கோடி நிதி வந்துவிட்டது.)
BSNL ல் நேரடி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு
3 சதவீத ஓய்வூதிய பங்கீடு வழங்க, BSNL நிர்வாக குழு ஒப்புதல் அளித்திருந்தது. DoT தற்போது இந்த முடிவை ஏற்றுள்ளது. இதனை தொடர்ந்து நமது பொது செயலர் இன்று, 30.09.2016, மனித வள இயக்குனரை நேரில் சந்தித்து, தனி ஓய்வூதிய நிதியை உருவாக்க கோரிக்கை வைத்துள்ளார்
ஊழியர்களுக்கு தவறாக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு, பிடித்தம் செய்ய நேர்ந்தால், பிடித்தம் செய்ய கூடாது என உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி, அதை DoP&T ஏற்று, உத்தரவு வெளியிட்டிருந்தது. அதை அமுல்ப்படுத்துவதற்கு பதிலாக, செலவீன துறைக்கு விளக்கம் கேட்டு BSNL கடிதம் எழுதியுள்ளதை தவறு என நமது பொது செயலர் மனித வள இயக்குனரிடம் இன்று 30.09.2016 நேரில் சந்தித்து, சுட்டிக்காட்டினார். இது சம்மந்தமாக கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டுள்ள தேவையற்ற உத்தரவை ரத்து செய்துவிட்டு, உச்ச நீதி மன்ற உத்தரவை BSNL நிறுவனமே அமுல்ப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மனித வள இயக்குனர் தக்க நடவடிக்கை எடுக்க உறுதி அளித்துள்ளார்
JAO ஆளெடுப்பு விதியில் சில கடுமையான நிபந்தனைகள் உள்ளதை சுட்டிக்காட்டி, அதை தளர்க்க, நமது பொது செயலர், தோழர்.பி. அபிமன்யு நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளார். கோரிக்கையை பரிசீலிப்பதாக, மனித வள இயக்குனர் உறுதி அளித்துள்ளார்

01-10-2016 முதல் 5.5% அக விலைப்படி உயர்வு. . .


Image result for bsnl ida october 2016
IDA increased by 5.5%, from the present 114.8%. The new IDA will be 120.3% with effect from 01.10.2016.

01-10-2016 முதல் 5.5 சதவீத அக விலைப்படி (IDA) உயர்ந்துள்ளது.
இத்துடன் மொத்த IDA 120.3 சதமாகும் 
(114.8%+5.5% = 120.3%)

செப்-30, தோழர் . பி. சீனிவாசராவ் நினைவு நாள்...




பண்ணையடிமைகளாக,விலங்கினும் கீழாக நிலப்பிரபுக்களால் நடத்தப்பட்ட மக்களுக்கு அடித்தால் திருப்பி அடி எனுணர்வூட்டி தாழ்த்தப்பட்ட மக்களை விடுதலை செய்த மாபெரும் தலைவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை கற்போம்.அவர்போல் வாழ முயல்வோம். இன்று,செப்-30, தோழர் . பி. சீனிவாசராவ்  நினைவு நாள்.

சென்னை சொசைட்டி நிலத்தை சூறையாட திட்டம்...


Thursday 29 September 2016

பணி நிறைவு செய்யும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். . .


அனைவருக்கும் . . .அவசர . . .அவசிய . . . வேண்டுகோள் ...


சென்னை சொசைட்டி சிறப்பு பிரதிநிதித்துவ கூட்டம் 28-09-16


சென்னை கூட்டுறவு சங்கத்தின் RGB உறுப்பினர்கள் பங்கேற்ற...,
சிறப்பு பிரதிநிதித்துவ  கூட்டம் 28-09-2016அன்று சென்னையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்... கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன:  
·                     சாதாரணக் கடன் ரூபாய் 6 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்வு.
·                     விழாக்கால கடன் ரூபாய் 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக உயர்வு
·                     கல்விக் கடன் ரூபாய் 10 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்வு.
·                     கணினிக் கடன் ரூபாய் 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்வு.
·                     குடும்ப சேமநல நிதி (FWS) ரூபாய். 1200/- லிருந்து ரூபாய். 1400/- ஆக பிடித்தம் .
  • காப்பீட்டு தொகை ரூபாய் 6 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்த்தப்பட்ட கடன்கள் அனைத்தும் மத்திய கூட்டுறவுப் பதிவாளர் அனுமதி பெற்று   (90 நாட்கள் கால அவகாசம்) 01-01-2017 முதல் அமுல் படுத்தப்படும்.
·                     கூட்டுறவு சங்கத்தில் 30 ஆண்டுகள் தொடர்ந்து உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு
               20-05-2014 முதல் ரூபாய். 10,000/- வழங்கப்படும்.
·                     RGB உறுப்பினர்களின் பயணக் கட்டணம்: ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு..., 2 வகுப்பு படுக்கை வசதியிலிருந்து..., 3 வகுப்பு குளிர்சாதன வசதிக் கட்டணம் வழங்கப்படும்.
குறிப்பு : இக் கூட்டத்தில் ஆய்படு பொருளில் இல்லாத வீடு என்ற பொருள் தொடர்பாக தன்னிச்சயாக தலைவர் எடுத்த முயற்சியை கூட்டம் கண்டனக்குரலை எழுப்பி நிராகரித்தது.