ரியோ : பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதே பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் இந்தியா தட்டிச் சென்றது. இந்திய வீர் வருண் சிங் பாடி வெண்கலம் வென்றார்.மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வருகிறது. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89மீ., உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இது ரியோ பாராலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் பதக்கம். இவர் தமிழகத்திலுள்ள சேலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.மற்றொரு இந்திய வீரரான வருண் சிங் பாடி உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்று வென்று அசத்தினார். இதனையடுத்து ஒரே பிரிவில் இந்திய வீரர்கள் இருவர் இரு பதக்கங்களை தட்டி சென்று அசத்தியுள்ளனர். பதக்கப்பட்டியலில் ஒரு தங்கம், ஒரு வெண்கலப் பதக்கத்துடன் இந்தியா 24வது இடத்தில் உள்ளது.
No comments:
Post a Comment