அருமைத் தோழர்களே ! காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் மதுரைக்கோட்ட வைரவிழா மாநாடு 24-09-16 மாலை சனிக்கிழமை எழுச்சியுடன் துவங்கியது.எல்ஐசி நிறுவனம் உருவாவதற்கு சில நாட்களுக்கு முன்பே மதுரையில் உதயமான ஊழியர் சங்கம் 60 ஆண்டுகளை எட்டி,எல்ஐசி நிறுவனத்துடன் தானும் வைரவிழாவை கொண்டாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாநாட்டில் கோட்டத் தலைவர் ஜி.மீனாட்சி சுந்தரம் கொடியேற்றினார். இதைத்தொடர்ந்து சார்பாளர்கள் மாநாட்டை துவக்கி வைத்து தென்மண்டல இன்சூரன்ஸ் கூட்டமைப்பு துணைத் தலைவர் ஆர்.தர்மலிங்கம் பேசினார். தோழமை சங்கம் என்ற அடிப்படையில் நமது BSNLEU சங்கத்தின் சார்பாக நமது மாவட்ட செயலர் தோழர்.சி. செல்வின் சத்தியராஜ் வாழ்த்துரை வழங்கினார். நமது சங்கத்தின் சார்பாக தோழர்கள், பிச்சைக்கண்ணு, செல்வம், சூரியன், சோணைமுத்து, வீரபத்திரன் ஆகியோரும் மாநாட்டில் கலந்து கொண்டனர். பொது மாநாடு 25-09-16 ஞாயிறன்று நடக்கிறது. மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment