அருமைத் தோழர்களே ! மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை மாற்றிட, தொழிலாளர் விரோத கொள்கையை தடுத்திட, நம்மை காத்திட, நமது பொதுத்துறையை பாதுகாத்திட, நமது நாட்டை பாதுகாத்திட இந்திய நாடு முழுவதும், பாரதி பாடியது போல் ஆஹா வென எழுந்தது யுக புரட்சி ...எங்கெங்காணினும் சக்தியடா...என அனைத்து பகுதி தொழிலாளர் வாக்கமும் ஒன்றாக இணைந்து, ஒரே மனிதனாக தங்களது எதிர்ப்பை ஆளும் மத்திய "பாஜக" விற்கு வலுவாக பதிவு செய்துள்ளது....
அதனுடைய ஒரு பகுதியாக நமது BSNLபொதுத்துறை பாதுகாப்பு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளுக்காக இந்திய நாடு முழுவதும் மிக உக்கிரமாக செப்-2, வேலை நிறுத்தத்தில் BSNL ஊழியர்கள் பங்கேற்றுள்ளார்கள். நமது மதுரை மாவட்டமும் தனது பங்கை செலுத்தியுள்ளது. போராட்ட களத்தில் உள்ள C&D ஊழியர்களுக்கு ஆதரவாக SNEA & AIBSNLEA சங்கங்கள் நடத்திய ஆதரவு ஆர்பாட்டத்திற்கு நமது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றோம் ...
மதுரை லெவல்-4 வளாகத்தில் நடைபெற்ற வேலைநிறுத்த விளக்க ஆர்ப்பாட்ட கூட்டத்திற்கு தோழர்கள், எ. பிச்சை கண்ணு, விஜயகுமார், என். சீனிவாசன் ஆகியோர் கூட்டு தலைமையேற்றனர். தோழர்கள், நாகராஜ், செல்வின் சத்தியராஜ், அருணாச்சலம், சோணைமுத்து ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். தோழர். யூனுஸ் நன்றி உரை நிகழ்த்தினார்... கூட்டத்தில் 35 பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் நமது வாழ்த்துக்களும், நன்றியும்...
No comments:
Post a Comment