Tuesday, 27 September 2016

27-09-16 வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்த ஆர்ப்பாட்டம்...

அருமைத் தோழர்களே! 27-09-16 அன்று  மதுரை BSNL  பொது மேலாளர்    அலுவலகமே திணறும் அளவிற்கு திரண்ட கூட்டம், வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்த ஆர்ப்பாட்டம் ...நடந்தேறியது.
ஆர்ப்பாட்டத்திற்கு  கூட்டுத்தலைமையாக தோழர்கள் வி. சுப்பராயலு, கே. வீரபத்திரன் ஆகியோர் பொறுப்பேற்றனர். தோழர்கள் கே. பழனிக்குமார் & ஜி.கே. வெங்கடேசன் இருவரும் பொருள்பொதிந்த கோரிக்கைகளின் கோஷங்களை விண்ணதிர எழுப்பினர். கோரிக்கைகளை விளக்கியும், நியாயம் குறித்தும் தோழர்கள் சி. செல்வின் சத்தியராஜ் & எஸ். சூரியன்  இருவரும் விளக்கி உரை நிகழ்த்தினர். 
அதனை தொடர்ந்து நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் , சங்கம் சார்பாக தோழர்கள்  சி. செல்வின் சத்தியராஜ், கே. பழனிக்குமார், வி. சுப்புராயலு, எஸ். சூரியன் ஆகியோரும் நிர்வாகத்தின் சார்பாக திருமதி.S.E. ராஜம்  ITS, GM-BSNL &  ராஜேஸ்வரி DGM (HR) இருவரும் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடந்தது. உடனடியாக சம்பளமும், போனஸ் பட்டுவாடா செய்வதற்கு ஒப்பந்த காரரை அறிவுறுத்த நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. புதிய விதிப்படி போனஸ் ரூபாய் 7000 வழங்க கொள்கை ரீதியாக நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. அதற்கான உறுதியான நடவடிக்கையை நிர்வாகம் எடுக்க இசைவு தந்ததை ஒட்டி போராட்டம் முடிவிற்கு வந்தது. 
பேச்சுவார்த்தை  முடிவுகளை  விபரங்களை விளக்கி தோழர்கள் பழனிக்குமார், செல்வின் சத்தியராஜ் இருவரும் உரை நிகழ்த்தினர் . இறுதியாக மாவட்ட உதவிச் செயலர் தோழர். எ. நெடுந்செழியன் நன்றி கூற போராட்டம் இனிதே நிறைவுற்றது.

No comments: