பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் தலித் மக்கள் மீது வன்கொடுமைத்தாக்குதல்களை நடத்தும் மதவெறி அமைப்புகளை மோடி அரசுஏன் தடை செய்யவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் தலித்கள் மீதான வன்கொடுமைகளை கண்டித்து புதுதில்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்பகுஜன் மஹாசங் கட்சி, தலித் சுவாபிமான் சங்ஹார்ஸ் தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பங்கேற்ற பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
பேரணியில் உரை நிகழ்த்திய சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருவது பற்றி மத்திய அரசு எந்தநடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. இதுநாட்டின் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பதாகும். இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் பரந்தஅளவிலான போராட்டங்கள் வெடிக்கும் என்று எச்சரிக்கிறோம்.பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் தலித்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கே இந்தப் போராட்டம் .
பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் செயல்படும் குழுக்களை ஏன் தடை செய்யவில்லை? அரசியல் சட்டத்தில் உறுதி படுத்தப்பட்டுள்ள சமத்துவ உரிமைகளை ஏன் தலித் மக்களுக்கு அளிக்க மறுக்கிறீர்கள்?“என்னைத் தாக்குங்கள்; தலித்களை தாக்காதீர்கள்” என்று பிரதமர் மோடி கூறினார். இதுபோன்ற வார்த்தை ஜாலங்கள் எந்த நோக் கத்தையும் நிறைவேற்றாது. எனவே தலித்கள்மீது குறி வைத்து தாக்குதல் நடத்தப்படும் போது பிரதமர் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
ஆனால் இதுகுறித்து அவர் எந்த உறுதி மொழியையும் இதுவரையிலும் தரவில்லை என்பதுதான் உண்மை.தலித் மக்களை வலிமைப்படுத்த ஒவ்வொரு தலித் குடும்பத்தினருக்கும் 5 ஏக்கர் நிலங்களை அளிக்க வேண்டும். கையினால் மலம் அள்ளும்நடைமுறையானது ஒழிக்கப்பட வேண்டும்.இந்தப் பேரணியானது, தலித் மக்களின் சுயமரியாதைக்கானது; அரசியல் சாசனத்தில்அளிக்கப்பட்டுள்ள சமத்துவத்தை உறுதிப்படுத்துவதைக் கோரியும் நடத்தப்படுகிறது. அனைத்து மாநிலங்களிலும் இதே போன்று பேரணிகள் நடத்தப்படும்.
இவ்வாறு யெச்சூரி கூறினார்.இதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர்ரெட்டி, பகுஜன் மஹாசங் தலைவரும் அண் ணல்அம்பேத்கரின் பேரனுமான பிரகாஷ் அம்பேத்கர் மற்றும் ரோஹித் வெமுலாவின் தாயார் உள்பட பலர் உரையாற்றினர்.
No comments:
Post a Comment