தோழர் ஏ.பி. என்று தமிழக தொழிலாளர்களால் அன்போடு அழைக்கப்பட்ட தோழர்ஏ.பாலசுப்ரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும், அரசியல்தலைமைக்குழு உறுப்பினராகவும்
பணியாற்றியவர்.வசதிமிக்க குடும்பத்தில் பிறந்த அவர்,தனது வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு வர்க்கப்
போராட்டத்திற்கு தன்னுடையவாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்.தியாகம்எனும் நெருப்பில் புடம்
போட்டு எடுக்கப்பட்ட பொதுவுடைமை இயக்க தலைவர்களில்அவரும் ஒருவர்.திண்டுக்கல் தோல்பதனிடும்
தொழிலாளர்களை அணிதிரட்டி அவர் நடத்தியபோராட்டங்கள், வீரகாவியங்களையும் விஞ்சக்கூடியவை.
மார்க்சியத்தின் ஒளியில்பல்வேறுநூல்களை எழுதியவர். தொழிலாளர்களை எழுச்சிகொள்ள செய்யும்
பேச்சாளர். மதுரைச்சதிவழக்கு உள்ளிட்டவழக்குகளில் சிக்கவைக்கப்பட்டஅவர், சிறையையும்,
சித்ரவதையையும்இன்முகத்தோடு ஏற்றுக் கொண்டவர். அவருடைய நினைவுகள் என்றென்றும்
உத்வேகமூட்டும்.அர்ப்பணிப்புமிக்க அவரது வாழ்க்கை இளைய தலைமுறைக்கு
என்றென்றும் பாடமாக விளங்கும்.
No comments:
Post a Comment