அருமை தோழர்களே ! நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் 14-09-16 புதன் அன்று மதுரை CSC/TRC-யில் மாவட்ட தலைவர் தோழர் A. பிச்சை கண்ணு தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. செயற்குழு கூட்டத்தை துவக்கி வைத்து நமது BSNLEU தமிழ் மாநில செயலர் தோழர்.A. பாபு ராதாகிருஷ்ணன் சிறப்புரை நிகழ்த்தினார்.
மதுரை மாவட்ட செயலர் தோழர்.C. செல்வின் சத்தியராஜ் ஆய்படு பொருள் மீதான முன் மொழிவுரையை நிகழ்த்தினார். அதன்பின் மாவட்ட சங்க நிர்வாகிகளும், கிளைச் செயலர்களும் ஆய்படு பொருள் மீது தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். மாவட்ட செயற்குழுவை வாழ்த்தி தோழர்கள்,S. ஜான் போர்ஜியா,CVP, N. சோணைமுத்து,D/S-TNTCWU, S. சூரியன் , முன்னாள் மாவட்ட செயலர் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
சென்னையில் நடைபெறவிருக்கும் BSNLEU அகில இந்திய மாநாட்டிற்கான நிதியாக மாநில சங்கம் நிர்ணயித்துள்ள ரூபாய் 7 லட்சத்தை மதுரை மாவட்டத்தில் வசூல் செய்து குறிப்பிட்ட காலவறைக்குள் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. ஒரு முதல் துவக்கமாக ரூபாய் 15000 மாநில செயலரிடம் கொடுக்கப்பட்டது. இறுதியாக மாவட்ட அமைப்பு செயலர் தோழியர்.V. ராஜேந்தரி நன்றி கூற, மாவட்ட செயற்குழு இனிதே நிறைவுற்றது.
1 comment:
RED SALUTE TO DISTRICT BSNLEU UNION FOR THEIR RESPECT TO ALL BRANCH SECRETARIES BY THEIR OWN CODE OF DISCIPLINE.
BY
GMD(O), BRANCH,
MADURAI
Post a Comment