அருமைத் தோழர்களே ! நமது மதுரை G.M அலுவலக கிளையின் அவசர பொதுக்குழு கூட்டம் கிளைத்தலைவர் தோழர்.சுப்புராயலு தலைமையில் 17-09-16 அன்று மதியம் G.M அலுவலக மனமகிழ் மன்றத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.. . .
கிளை செயலர் தோழியர்.N. ஈஸ்வரி அனைவரையும் வரவேற்றதோடு, கிளைகூட்டத்தின் நோக்கம் குறித்தும் விளக்கி உரை நிகழ்த்தினார். மாவட்ட அமைப்பு செயலர் தோழியர்.V. ராஜேந்தரி மாவட்ட செயற்குழு முடிவுகளை விளக்கி உரை நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து, முன்னாள் மாவட்ட செயலர் தோழர்.எஸ். சூரியன் அகில இந்திய மாநாடு சென்னையில் நடக்க உள்ளது குறித்தும், நமது கடமை குறித்தும் விளக்கி உரை நிகழ்த்தினார். அதன்பின் மாவட்ட செயலர் தோழர்.சி. செல்வின் சத்தியராஜ் தனது உரையில், செப்-2, வேலை நிறுத்தம் குறித்தும், மாநில , மாவட்ட செயற்குழு முடிவுகள் குறித்தும் விளக்கி உரை நிகழ்த்தினார்.
கிளை பொதுக்குழு கூட்டம், நமது BSNLEU அகில இந்திய மாநாட்டிற்கான நிதியை இரண்டு தவணைகளில் ஊழியர்களிடம் திரட்டி, மாவட்ட சங்கம் அறிவித்துள்ள நிதியை வழங்குவது என்று ஒரு மனதாக முடிவு செய்தது. இறுதியாக கிளை பொருளர் தோழியர் . S.M. புஷ்பராணி நன்றி கூற கிளைக்கூட்டம் இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment