அருமைத் தோழர்களே ! நமது BSNL நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை பெற, பல புதிய திட்டங்களை அதிரடியாக அறிவித்து வருகிறது. போட்டி சூழலை சமாளிக்க இந்த புதிய யுத்தியை டில்லி தலைமையகம் கையாண்டு வருகிறது. திட்டங்கள் பல வகையாக அறிவித்தாலும், அதை வெற்றி பெற செய்ய ஊழியர்களால் தான் முடியும் என்பதையும் நிர்வாகம் சரியாக உணர்ந்துள்ளது. அதற்காக, புதிய தரைவழி மற்றும் அகன்ற அலைவரிசை புது இணைப்புக்களைப் பெற்றுத்தரும் BSNL ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் . . . .
புதிய தரைவழித்தொலைபேசி பிடித்தால் ஊக்க தொகை ரூ.100/-
புதிய தரைவழி & பிராட்பாண்ட் பிடித்தால் இணைப்பிற்கு ரூ.200/-
முதல் பில் கட்டப்பட்டபின் ஊக்கத்தொகை பட்டுவாடா செய்யப்படும்.
12/09/2016 முதல் இத்திட்டம் அமுலுக்கு வருகிறது. ஊக்கத்துடன் பணிபுரிந்து, ஊக்க தொகையை அதிகமாக பெற முயல்வோம்! நிறுவனத்தை லாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவோம்!!
1 comment:
போற்றுதலுக்கு உரிய முயற்சி
முயற்சி வெல்லட்டும்
Post a Comment