Thursday, 8 September 2016

08-09-16 அகில இந்திய அளவில் தர்ணா போராட்டம் . . .

அருமைத் தோழர்களே ! நமது C&D ஊழியர்களின்   24 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, நமது  BSNLEU அகில இந்திய சங்கத்தின் அறைகூவலுக்கு இணங்க நாடு முழுவதும் நடைபெற்ற தர்ணா போராட்டத்தின் ஒரு பகுதியாக நமது மதுரை தொலை  தொடர்பு மாவட்ட சங்கத்தின் சார்பாக, மதுரை தல்லாகுளம், லெவல்-4 வளாகத்தில், மாவட்டத்தலைவர் தோழர் A. பிச்சைகண்ணு தலைமையில் மிகவும் சிறப்பாக 08-09-16 அன்று  தர்ணா போராட்டம் நடைபெற்றது  . . .
தர்ணா போராட்டத்தை மாநில சங்கத்தின் துணைத் தலைவர் தோழர்.S. ஜான் போர்ஜியா துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். அதன் பின் மாவட்ட சொல்ற தோழர்.C. செல்வின் சத்யராஜ் கோரிக்கைகளை விளக்கி உரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள்,  K. பழனிக்குமார்,N. செல்வம் ,T.K. சீனிவாசன், S. மானுவேல் பால்ராஜ், A. குருசாமி  ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினார்கள். 
தர்ணா போராட்டத்தை முடித்து வைத்து தோழர்.எஸ். சூரியன் நிறைவுரை நிகழ்த்தினார். மாவட்ட உதவி பொருளர் தோழர். ஆர். அய்யனார்சாமி நன்றி கூற தர்ணா போராட்டம் நிறைவுற்றது. தர்ணாவில் 12 பெண்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments: