அருமைத் தோழர்களே C&D ஊழியர்களின் பிரச்சனைகளுக்காக நமது CMD, திரு. அனுபம் ஸ்ரீவத்சவா அனைத்து சங்க தலைவர்களை 08.09.2016
அன்று சந்தித்தார். BSNLEU, NFTE BSNL, SNEA, AIBSNLEA, BSNLMS, TEPU,
AIBSNLOA மற்றும் BEA சங்க பிரதிநதிகள் கலந்து கொண்டனர். நமது BSNLEU சங்கம் சார்பாக பொது செயலர் தோழர் P .அபிமன்யூ, துணை பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். ரிலையன்ஸ் JIO வருகையால் நமது நிறுவனம் சந்திக்க உள்ள சவால்கள், அதை சமாளிக்க நாம் எடுத்துள்ள முயற்சிகள் போன்ற விஷயங்களை விளக்கினார். BSNL நிறுவனத்தின் அதிரடி திட்டமான BB UL 249 திட்டத்தை
பிரபலப்படுத்த கோரினார். புதிய திட்டத்தால், ஏற்பட உள்ள வருவாய் இழப்புகளை சமாளிக்க, புதிய இணைப்புகளை அதிகமாக பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். தரமான சேவை வழங்கினால் தான் நாம் போட்டியை சமாளிக்க முடியும் எனவும் கூறினார்.2015-16ம் ஆண்டிற்கான செயல்ப்பாட்டு லாபம், ரூ. 3,855 கோடி என பெருமையுடன் குறிப்பிட்டார். நடப்பு நிதியாண்டில் நட்டம் ரூ. 3,500 கோடியாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார்.தோழர்களே! சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பதுபோல், நமது நிறுவனம் இருந்தால் தான் நாம். எனவே, புதிய அதிரடி திட்டத்தை வேகமாக பொது மக்களிடத்தில் கொண்டு சென்று, புதிய இணைப்புகளையும் அதிரடியாக, அதிகமாக பிடிப்போம்!. வருவாயை அதிக படுத்துவோம்!! கடுமையான சவால்களை வெற்றிகரமாக சந்திப்போம் !!!.
No comments:
Post a Comment