Friday, 30 September 2016

நமது BSNLEU மத்திய சங்க செய்தி ...

2014-2015 ம் ஆண்டு போனஸ் ரூ. 3000 வழங்க, 28.09.2016 அன்று கூடிய நிர்வாக குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்த கட்டமாக, வாரிய குழு (BOARD) கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, பட்டுவாடா உத்தரவு வெளியிடப்படும்.
Image result for news flash
GPF பட்டுவாடாவிற்கு தேவையான நிதியை, ஆயுத பூஜைக்கு முன்பு வழங்க கார்ப்பரேட் அலுவலகம், நமது சங்கத்திற்கு உறுதி வழங்கியுள்ளது. (குறிப்பு: தமிழகத்திற்கு 24 கோடி நிதி வந்துவிட்டது.)
BSNL ல் நேரடி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு
3 சதவீத ஓய்வூதிய பங்கீடு வழங்க, BSNL நிர்வாக குழு ஒப்புதல் அளித்திருந்தது. DoT தற்போது இந்த முடிவை ஏற்றுள்ளது. இதனை தொடர்ந்து நமது பொது செயலர் இன்று, 30.09.2016, மனித வள இயக்குனரை நேரில் சந்தித்து, தனி ஓய்வூதிய நிதியை உருவாக்க கோரிக்கை வைத்துள்ளார்
ஊழியர்களுக்கு தவறாக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு, பிடித்தம் செய்ய நேர்ந்தால், பிடித்தம் செய்ய கூடாது என உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி, அதை DoP&T ஏற்று, உத்தரவு வெளியிட்டிருந்தது. அதை அமுல்ப்படுத்துவதற்கு பதிலாக, செலவீன துறைக்கு விளக்கம் கேட்டு BSNL கடிதம் எழுதியுள்ளதை தவறு என நமது பொது செயலர் மனித வள இயக்குனரிடம் இன்று 30.09.2016 நேரில் சந்தித்து, சுட்டிக்காட்டினார். இது சம்மந்தமாக கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டுள்ள தேவையற்ற உத்தரவை ரத்து செய்துவிட்டு, உச்ச நீதி மன்ற உத்தரவை BSNL நிறுவனமே அமுல்ப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மனித வள இயக்குனர் தக்க நடவடிக்கை எடுக்க உறுதி அளித்துள்ளார்
JAO ஆளெடுப்பு விதியில் சில கடுமையான நிபந்தனைகள் உள்ளதை சுட்டிக்காட்டி, அதை தளர்க்க, நமது பொது செயலர், தோழர்.பி. அபிமன்யு நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளார். கோரிக்கையை பரிசீலிப்பதாக, மனித வள இயக்குனர் உறுதி அளித்துள்ளார்

No comments: