Tuesday 30 September 2014

தோழமைக்கு ... தோழனின் ...வாழ்த்துக்கள்.

அருமைத் தோழர்களே! தபால்-தந்தி,டெலிகாம், BSNL இந்த மூன்று பரினாமா இலாக்கா மாற்றங்களிலும், தன்னை, தன்னுடைய வளர்ச்சியை, தோழமையை, C&D ஊழியர்கள் மத்தியில், அதிகாரிகள்மத்தியில் , அனைவருடனும், அன்பாகவும், தேவைப்படின் பாரதி சொன்ன கோபத்தோடு தனது தொழிற்சங்க வாழ்க்கையில் நாளுக்கு நாள் மிளிர்ந்து பணியாற்றி, இன்று 30.09.2014  இலாக்க பணியில் இருந்து மட்டும் பணிநிறைவு செய்யும் அருமைத் தோழர்.N.வீரபாண்டியன், மதுரைவரை நல்ல மாநிலச் செயலராக, தற்போதைய CWCஉறுப்பினராக அப்பழுக்கற்ற பணியாற்றிக் கொண்டி ருக்கும்  தோழமைக்கு ... தோழன்,எஸ்.சூரியனின்  ...இனிய வாழ்த்துக்கள்.
--பணிநிறைவு காலம் சிறக்க வாழ்த்தும்,என்றும் தோழமையுடன் SS-MA.

Monday 29 September 2014

30 அம்ச கோரிக்கை - நமது கோரிக்கை -வெளிநடப்பு ...

அருமைத் தோழர்களே ! 30அம்ச கோரிக்கைஎன்பது -நமது BSNL உள்ள C&D ஊழியர்கள்    அனைவரின்   கோரிக்கை - தீர்வின்றி வெகுநாட்களாக இருக்கும், நமது அனைத்து கேடர்களுக்குமான கோரிக்கைக்காக இது காறும் பல போராட்டங்களை நடத்தி விட்டோம். ஆனாலும் கேளாக் காதுகளாக இருக்கும் BSNLநிறுவனத்தின்தலைமைக்குவெளிப்படுத்துவோம்நமதுஉணர்வுகளை......
வெளிநடப்பு போராட்டத்தின் மூலமாக,...புரியவைப்போம்...புரியாதவர்களுக்கு 
அன்பிற்கினியவர்களே!BSNLஉள்ள  நமது கோரிக்கைகளின் தீர்விற்காக நாம் போராடாமல், பின் யார் வந்து போராடுவது. பொறுத்தது போதும், பொங்கி எழு தோழா! வெளிநடப்பு போராட்டம், 30.09.14 அன்று காலை 11 மணி முதல் நன்பகல் 1 மணிவரைதான். 2 மணி நேர வெளிநடப்பு  வித்திடட்டும் நமது 30 அம்ச கோரிக்கைகளின் வெற்றிக்கு...
போராட்டகளம் காண்போம் வா தோழனே.! ஒன்றுபட்ட போராட்டம்  நமது துயரோட்டும் நிச்சயம். வருக... தோழனே.! வருக !!வெல்வோம்...!!!
--- போராட்ட வாழ்த்துக்களுடன் ...என்றும் தோழமையுடன்,எஸ்.சூரியன் .

30.09.2014 பணி நிறைவு பாராட்டு விழா . . .

அருமைத் தோழர்களே! நமது மதுரை SSA-யில் இந்த செப்டம்பர் மாதம்பணி நிறைவு செய்யக் கூடிய 8 பேருக்கான பணி  நிறைவு பாராட்டு விழா  30.09.2014 அன்று காலை சுமார் 11 மணியளவில்(நமது வெளிநடப்பு போராட்டத்தின் காரணமாக விழா மதியம் 2 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.) மதுரை, பீபிகுளம்,நமது  BSNL பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது....
பணி நிறைவு செய்யும் தோழர்கள் 
1. N.  ஆறுமுகம், TS-NJR 
2. G. கோவிந்தசாமி, TM-NORTH 
3. P.R. கிருஷ்ணமூர்த்தி,SSS-GM(O) 
4. G.  முருகேசன், SSS-BOK 
5.  A. முத்துராமன், STS-GM(O) 
6.  S. நாராயணசாமி, TM-TRPLI 
7.  S. ராமசந்திரன், TM-ELLIS 
8.  K. சந்தானம், TM-EMM 
மேற்கண்ட தோழர்களின் பணி நிறைவு காலம் எல்லா வகையுலும் சிறக்க நமது மதுரை BSNLEU மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.
---என்றும் தோழமையுடன் எஸ். சூரியன் ...D/S-BSNLEU.

30.09.14 தயாராகுவோம் வெளிநடப்பு போராட்டத்திற்கு...

30-செப்- 2- மணி நேர வெளிநடப்பு போராட்டம். . . .
அருமைத் தோழர்களே! எதிர்வரும் 30-செப்- அன்று காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணிவரை ஆக மொத்தம் 2- மணி நேர வெளிநடப்பு போராட்டம் நமது BSNL ஊழியர் சங்கங்கள் JAC சார்பாக இந்திய நாடுமுழுவதும் 3 வது கட்ட போராட்ட மாக மிகவும் சக்தியாக நடத்தவேண்டியுள்ளது. இப் போராட்டத்திற்கு பிறகும் BSNL நிர்வாகமும், மத்திய அரசும் நமது BSNL ஊழியர்களின் 30 அம்ச கோரிக்கையை தீர்க்க வில்லையெனில், அடுத்தகட்டமாக நவம்பர் முதல் வாரத்தில் நமது மத்திய சங்கங்களின்  JAC கூடி காலவரை யற்ற வேலைநிறுத்தம் உட்பட முடிவெடுக்கும். 2 மணி நேர வெளிநடப்பு போராட்டத்தின் போது ஸ்தலமட்டத்தில் அனைத்து கிளைகளிலும் JAC சார்பாக கோரிக்கை விளக்ககூட்டமும், ஆர்பாட்டமும் நடத்திட வேண்டுகிறோம்.

--- என்றும் தோழமையுடன் S.சூரியன், D/S-BSNLEU.

சம்பளம் காலதாமதம் குறித்து மாநில நிர்வாக கடிதம்...

சம்பளம் ஊழியர்களுக்கு  காலதாமதம் ஆவது குறித்து மாநில நிர்வாகத்தின் (CGM) அலுவலகத் திலிருந்து  ஒரு சுற்றறிக்கையை  மாவட்ட மையங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

விதேஷ் சஞ்சார் சேவா பதக்கம் இருவருக்கு கிடைத்துள்ளது...

அருமைத் தோழர்களே ! தமிழ் 

மாநிலத்தில் 13 பேருக்கான விதேஷ் 

சஞ்சார் சேவா பதக்கம் 

அறிவிக்கப்பட்டுள்ளது. நமது மதுரை 

 மாவட்டத்தில். . . . 

 தோழர்கள்-J.பாலசுப்பிரமணியன்,JAO,S.P.கண்ணன்,TTA,ஆகியஇருவருக்கும் விதேஷ்சஞ்சார் சேவா பதக்கம்  கிடைத்துள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெர்வித்துக் கொள்கிறோம். நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம், தனது தோழமை வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.

Sunday 28 September 2014

மாநில மாநாட்டிற்கு திட்டம் தீட்டிய 27.09.14 செயற்குழு...

அருமைத் தோழர்களே! நமது BSNLEU தமிழ் மாநிலசங்கத்தின் செயற்குழு கூட்டம் மாநில துணைத் தலைவர் தோழர்.L.பரமேஸ்வரன் தலைமையில் 27.09.14 சனிக்கிழமை அன்று சென்னை கிண்டி CITU அலுவலகத்தில் நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக  நமது BSNLEU சங்க கொடியை, இம் மாதம் பனி ஓய்வில் செல்லவிருக்கும் வேலூர் மாவட்டச் செயலர் தோழர். ஞானசேகரன் ஏற்றிவைத்தார்.மாநில செயற்குழு அஞ்சலி செலுத்திய பின், செயற்குழுவிற்கு வந்திருந்தவர்களை வரவேற்று, CGM அலுவலக மாவட்டச்செயலர் தோழர்.சிவக்குமரன் உரை நிகழ்த்தினார். அதன் பின் மாநிலச் செயற்குழுவில் தோழர்.S.செல்லப்பா, மாநிலச் செயலர்   நமது 7 வதுதமிழ்மாநிலமாநாட்டிற்குஉரியஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். ஆண்ட றிக்கை மீதான திருத்தங்களை நமது மாவட்டச் செயலர் தோழர்.S.சூரியன் உட்பட அனைத்து மாநில செயற்குழு உறுப்பினர்களின் கருத்துக்களின் இணைப்போடு, ஆண்டறிக்கை ஒருமனதாக மாநில செயற்குழு ஏற்றுக் கொண்டது. அதன் பின் மாநில பொருளர் தோழர் K.சீனிவாசன் மாநாட்டின் வரவு-செலவுகளை சமர்ப்பித்தார்.  மாநில செயற்குழு வரவு-செலவு கணக்கையும் ஒரு மனதாக ஏற்றுக்கொன்டது.தோழர்.சுப்பிரமணியன்(திருப்பூர்) நன்றி கூறினார்.நமது மதுரை மாவட்டத் திலிருந்து, தோழர்கள், S.ஜான் போர்ஜியா, C.செல்வின் சத்தியராஜ், S.சூரியன் ஆகியோர் மாநில செயற் குழு கூட்டத்தில்  கலந்து கொண்டனர். 
எதிர் வரும் அக்டோபர் 11,12-13 தேதிகளில் திருச்சி மாநகரில் மிகவும் எழுச்சியுடன்  நடைபெறவுள்ள 7 வது மாநில மாநாட்டை சிறப்பாக நடத்திட அனைத்து வகையான  திட்டங்களையும்  செயற்குழு தீட்டியது. மாநில மாநாடு 11.10.14 அன்று காலை சரியாக 10 மணிக்கு துவங்கும். முதல் நாள் நிகழ்சியில், தோழர்கள், P.அபிமன்யு,G.S-BSNLEU, T.K ரெங்கராஜன்,M.P, P. சம்பத், தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியோரும், நமது BSNL பகுதி தொழிற்சங்க தலைவர்களும்  உரையற்ற இருக்கிறார்கள்.
 *  மாநிலமாநாட்டு நிதியாக ஒவ்வொரு உறுப்பினரும் ரூ.250 வீதம் தரவேண்டும்.
 * நமது மதுரை மாவட்டத்தின் சார்பாக இதுவரை வசூலான ரூ.80000 மாநில சங்கத்திடம்  வழங்கப்பட்டுள்ளது. நிதி தரவேண்டிய கிளை சங்கங்கள் தாமதம் இன்றி  நமது மாவட்ட பொருளர் தோழர்.S. மாயாண்டி வசம் தரவேண்டும்.
  *  மாநில மாநாட்டிற்கு வரும் பெண்களுக்கு சார்பாளர் ஒதுக்கீட்டுலிருந்து விதி விலக்கு அளிக்க மாநில சங்கம் முடிவு செய்துள்ளது.
 *  நமது மதுரை மாவட்டத்திற்கு Voting Strength அடிப்படையில் 43 சார்பாளர்கள் அனுமதிக் கப்படுவர். 
 * மாநில மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியான 11.10.14 பொது அரங்கிற்கு எவ்வளவு பார்வையாளகள்  வேண்டு மானாலும் அனுமதிக்கப்படுவர். ஆனால்   சார்பாளர் நிகழ்ச்சி  நாட்களான 12.10.14 & 13.10.14 ஆகிய நாட்களில்  பார்வையாளர்கள் அனுமதி இல்லை.
*மாநிலமாநாட்டிற்கானசார்பாளர்கட்டணம் ரூ.350  என முடிவு செய்யப்பட்டுள்ளது.

பகத் சிங்: பாரதத்தின் சிங்கம் . . .

இந்திய விடுதலைக்காக மட்டுமல்லஏகாதிபத்தியத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்த்துப் போராடியவர்.-பகத்சிங் பிறந்தநாள்: 27.09.1907
லாகூர் மத்திய சிறையில் 23.03.1931-ல் தூக்கிலிடப்பட்ட பகத் சிங், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய நாயகன் மட்டுமல்ல, தீவிர சிந்தனையாளனும்கூட. இளமையிலிருந்தே வாசிப்பு, சிந்தனை, செயல்பாடு என ஒருங்கிணைந்த இயக்கம் கொண்டிருந்த ஆளுமைதான் பகத் சிங். இதனால்தான் ஒவ்வொரு தலைமுறைக்கும் உத்வேகம் அளித்திடும் நாயகனாக இருந்துகொண்டிருக்கிறார். எனவேதான், உலக அரங்கில்சே குவேரா வகிக்கும் பாத்திரத்தை இந்தியத் துணைக் கண்டத்தில் பகத் சிங் வகிக்கிறார்.1919-ல் நூற்றுக் கணக்கான இந்தியர்களின் உயிரைப் பறித்த ஜாலியன் வாலாபாக் படுகொலைதான் பகத் சிங் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படுகொலை நடந்த சமயத்தில் பகத் சிங்குக்கு வயது 12. படுகொலை நடந்த இடத்தில் இருந்த மண்ணை எடுத்துவந்து பாதுகாத்து வைத்திருந்தார் பகத் சிங்.உலகியல் ஆசைகளுக்கு இடமில்லைபகத் சிங்கின் பாட்டியின் ஆசையை நிறைவேற்றும் வகையில், பகத் சிங்குக்குத் திருமண ஏற்பாட்டை அவருடைய தந்தை மேற்கொண்டபோது, ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறி கான்பூர் சென்றுவிடுகிறார், விடுதலைப் போராட்ட நடவடிக்கைகளைத் தொடர்வதற்காக. அந்தக் கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்: ‘என் வாழ்க்கை ஓர் உன்னத லட்சியத்துக்காக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது: இந்திய விடுதலைதான் அந்த லட்சியம். அதன் காரணமாக, வசதிவாய்ப்புகளுக்கும் உலகியல் ஆசைகளுக்கும் என் வாழ்வில் இடமில்லை. நான் சிறுவனாக இருந்தபோதே நாட்டின் சேவைக்காக அர்ப் பணிக்கப்பட்டவன் என்று தாத்தா சபதம் செய்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். ஆகவே, அப்போதைய சபதத்தை மதிக்கிறேன். என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.’பகத் சிங் குடும்பத்தினரே தேசியவாதிகளாக விளங்கியவர்கள்தான். பகத் சிங் பிறந்தபோதுதான் அவரது தந்தை கிஷன் சிங்கும் மாமா சுவரண் சிங்கும் சிறையிலிருந்து விடுதலை ஆனார்கள். இன்னொரு மாமா அஜித் சிங் நாடுகடத்தப்பட்டிருந்தார். 20 வயதில் தூக்கிலிடப்பட்ட கர்தார் சிங் சரபாதான் பகத் சிங்குக்கு முன்மாதிரியான ஆளுமை. சரபாவின் புகைப்படம் அவரது சட்டைப் பையில் எப்போதும் இருக்கும்.தூக்குக் கயிற்றை நோக்கி1928-ல் சைமன் கமிஷனைப் புறக்கணிக்க நிகழ்ந்த ஊர்வலத்தில் முதுபெரும் தலைவரான லாலா லஜபதிராய் கொல்லப்பட்டார். அதற்குப் பிறகுதான் தீவிரப் போராட்டப் பாதையில் பகத் சிங் ஈடுபடுகிறார். லஜபதிராயின் மரணத்துக்குக் காரணமான போலீஸ் அதிகாரி ஸ்காட் உயிரைப் பறிப்பதற்காக பகத் சிங்கும் அவரது நண்பர்களும் போட்ட திட்டம், ஜே.பி. சாண்டர்ஸ் என்னும் இன்னொரு அதிகாரியின் உயிரைப் பறித்துவிடுகிறது. இதற்கிடையே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மக்கள் விரோத மசோதாக்கள் மீது எதிர்ப்பைக் காட்டும் வகையில் பகத் சிங்கும் பி.கே. தத்தும் சட்டசபைக்குள் நுழைந்து இரண்டு குண்டுகளை வீசினார்கள். இந்த வழக்கில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஜே.பி. சாண்டர்ஸ் கொலை வழக்கில் சுகதேவ், ராஜகுருவுடன் பகத் சிங்குக்கும் சேர்த்துத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, குறித்த தேதிக்கு ஒரு நாளுக்கு முன்பாக, மாலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. (வழக்கமாகக் காலையில்தான் தண்டனை நிறைவேற்றப்படும்).தன் போராட்ட நடவடிக்கைகளுக்கிடையே ஆக்ராவில் 175 புத்தகங்களுடன் ஒரு நூலகத்தை பகத் சிங் அமைத்தார். லாகூரில் லஜபதிராய் நிறுவியிருந்த துவாரகாதாஸ் நூலகத்தை அதிக அளவில் பயன்படுத்தினார். தூக்கிலிடப்படுவதற்கு முன்பு சிறையில் இருந்த இரண்டாண்டு காலத்தில் கவிதை, சட்டம், அரசியல், பொருளாதாரம், தத்துவம், சோஷலிஸப் புரட்சி என்று பல்வேறு துறைகள் தொடர்பாக நிறைய வாசித்திருந்தார். தன் எண்ணங்களையும், வாசிப்பைப் பற்றியும், வாசித்ததில் முக்கியப் பகுதிகளையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்தார். அந்தக் குறிப்பேடு, ரகசிய ஆவணம் என்பதால் பின்னாளில் அவரது மருமகன் அபே குமார் சிங்கால் படியெடுக்கப்பட்டு, குருகுல் இந்திரபிரஸ்தா என்னும் கல்வி நிறுவனத்தின் நிலவறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, 1994-ல் நூலாக வெளியிடப்பட்டது. அவர் சிறையில் இருந்த போதுநான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ உள்ளிட்ட நான்கு நூல்களை எழுதினார். இது தவிர, ஒரு மொழிபெயர்ப்பையும் செய்திருக்கிறார்.அரசியல் பரிணாமம்இளைஞரான பகத் சிங்கின் பரிணாம வளர்ச்சி எப்படி இருந்தது என்பதை அவரது சகாவாக உடனிருந்து போராடிய தோழரான சிவவர்மா இப்படிக் கூறுகிறார். “அவரது சிந்தனைப் போக்கின் பரிணாமம் தீவிரமானது. 1924-க்கு முன் அவரைப் பார்த்தவர்கள், அவர் பப்பர் அகாலிகளுடன் இருந்ததாகக் கூறினார்கள்; 1925-26 காலகட்டத்தில் அவரைக் கண்டவர்கள் பகுனின், குரோபோட்கின் போன்ற ரஷ்யப் புரட்சியாளர்களின் செல்வாக்குக்கு உட்பட்ட அராஜகவாதிகளின் தொடர்பில் இருந்தார் என்றார்கள்; 1927-28 காலகட்டத்தில் அவரை எதிர்கொண்டவர்கள் சோஷலிஸ்ட் என்றழைத்தனர்; 1929-31 ஆண்டுகளில் பார்த்தவர்கள் அவரை மார்க்ஸிஸ்ட்கம்யூனிஸ்ட் என்றனர்.”பிரிட்டிஷாரை வெளியேற்றிவிட்டு இன்னொரு அதிகாரத் தரப்பினரிடம் ஆட்சியை ஒப்படைப்பதால் மக்களுக்கு நன்மை விளையாது. சோஷலிஸ மாற்றத் தால்தான் மக்களுக்கு நன்மை ஏற்படும் என்பதுதான் பகத் சிங்கின் நிலைப்பாடு. இதனை அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்: “புரட்சி என்பது உலகத்தின் ஒரு சட்டம். அது மனிதவர்க்க முன்னேற்றத்தின் ரகசியம். இதிலே புனிதத்துவச் சங்கிலிகள் பிணைக்கப்பட வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது. தனிநபர்களைப் பழிவாங்கும் நோக்கம் புரட்சி நவடிக்கைகளின் அம்சமாகாது. துப்பாக்கிகளாலும் வெடிகுண்டுகளாலும்தான் இதைச் சாதிக்க வேண்டும் என்பதில்லை.”மேலும், பகத் சிங் தன் சிறைக் குறிப்புகளில் வி.என்.ஃபிக்னர் என்பவரின் இந்த மேற்கோளைக் குறித்துவைத்திருந்தார்: “ஏசு கிறிஸ்துவின் சரிதத்தால் ஈர்க்கப்பட்டிருப்பவர் நிச்சயமாக ஒரு புரட்சியாளரைப் புரிந்துகொள்வார்.”நினைவில் நிற்கும் மரணம்தூக்கிலிடப்படுவதற்கு முன்பாகத் தன் குடும்பத் தினரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, பகத் சிங்கின் அம்மா வித்யாவதி அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு இப்படிக் குறிப்பிட்டார்: “ஒவ்வொருவரும் ஒரு நாள் மடிய வேண்டியவரே. ஆனால், உலகம் நினைவில் வைத்துப் போற்றும் மரணம்தான் மிகச் சிறந்தது.”இயல்பிலேயே கூச்சமும் தயக்கமும் மிகுந்த இளைஞரான பகத் சிங், துரிதகதியில் வளர்ந்து, தீவிரமாகச் செயலாற்றி, சிறிதும் பின்வாங்காது, சாகும் தருணம் வரை படிப்பதும் சிந்திப்பதும் எழுதுவதுமாக இருந்து, தூக்குக் கயிற்றை முத்தமிட்டார்.ஒவ்வொருவரும் உலகை மாற்றுவதுபற்றி எண்ணு கிறார்களேயொழிய தன்னை மாற்றிக்கொள்வதுபற்றி யாரும் எண்ணுவதில்லைஎன்பார் டால்ஸ்டாய். அப்படியில்லாமல் தன்னை மாற்றிக்கொண்டு, உலகை மாற்றுவதுபற்றி எண்ணியவராக/ செயல்பட்டவராக பகத் சிங் இருந்திருக்கிறார். ஒவ்வொரு தலைமுறை இளைஞர்களும் அவரை நாயகனாகக் கொண்டாடு வதற்கு அதுதான் காரணமாகிறது.08.04.1929-ல் சட்டசபை குண்டு வீச்சுக்கு மூன்று நாட்கள் முன்னதாக தோழன் சுகதேவுக்கு எழுதிய கடிதத்தில், வாழ்க்கைகுறித்து பகத் சிங்குக்கு இருந்த புரிதலைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்: ‘இந்தக் கடிதத்தை நீ பெறும் வேளையில், நான் முடிவில்லாத தொலைதூரத்தை நோக்கிப் போய்க் கொண்டிருப்பேன். வேறெந்த நாளையும்விட இன்று நான் மிகமிக மகிழ்ச்சியாக உள்ளேன் என்பதைத் தெரியப்படுத்துகிறேன். என் வாழ்வின் எல்லா அழகையும் தாண்டி, எல்லா இனிய நினைவுகளையும் தாண்டி, இந்தப் பயணத்துக்கு நான் தயாராகிவிட்டேன்...’தான் செய்யவிருந்ததில் ஆயிரத்தில் ஒரு பகுதியைக் கூடச் செய்ய இயலவில்லை என்பது மட்டுமே அவரது வருத்தமாயிருந்தது. ‘பல்வந்த் சிங்எனும் புனைபெயரில் எழுதிய பகத் சிங்கைசர்தார்என்று சக தோழர்கள் அழைக்க, ‘பகன்வாலா’ (கடவுளின் அதிர்ஷ்டக் குழந்தை) என்று அவரது பாட்டி அழைத்து மகிழ்ந்தார். ஆனால், இந்தியா முழுவதும் அவரைபாரதத்தின் சிங்கம்என்று அழைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

30-செப்- 2- மணி நேர வெளிநடப்பு மாநில சங்க சுற்றறிக்கை.

அருமைத் தோழர்களே! எதிர்வரும் 30-செப்- அன்று காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணிவரை  ஆக மொத்தம் 2- மணி நேர வெளிநடப்பு போராட்டம் நமது BSNL ஊழியர் சங்கங்கள் JAC சார்பாக இந்திய நாடுமுழுவதும் 3 வது கட்ட போராட்ட மாக மிகவும் சக்தியாக நடத்தவேண்டியுள்ளது. இப் போராட்டத்திற்கு பிறகும் BSNL நிர்வாகமும், மத்திய அரசும் நமது BSNL ஊழியர்களின் 30 அம்ச கோரிக்கையை தீர்க்க வில்லையெனில், அடுத்தகட்டமாக நவம்பர் முதல் வாரத்தில் நமது மத்திய சங்கங்களின்  JAC கூடி காலவரை யற்ற வேலைநிறுத்தம் உட்பட முடிவெடுக்கும். 2 மணி நேர வெளிநடப்பு போராட்டத்தின் போது ஸ்தலமட்டத்தில் அனைத்து கிளைகளிலும் JAC சார்பாக கோரிக்கை விளக்கமும், ஆர்பாட்டமும் நடத்திட வேண்டுகிறோம்.