Wednesday 17 September 2014

2 வது நாள்16.09.14 சென்னைCGM அலுவலகம் திணறியது...

அருமைத் தோழர்களே ! சென்னை, கிரீம்ஸ் ரோடு  CGM அலுவலகத்தில் நமது BSNLEU+TNTCWU இரு சங்கங்களும் ஒரு புதிய அத்தியாத்தை படைத்துள்ளது, இதுவரைசென்னைCGM அலுவலகம் இப்படி ஒரு போராட்டத்தை சந்தித்தது இல்லை எனக் கூறினால் அது மிகையாகாது. 2 வது நாள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் தோழர்.பி.சம்பத் துவங்கி வைத்தார்.2வது நாள் சென்னை CGM அலுவலகத்தில் நடைபெற்ற  உண்ணா விரதத்தில்  தமிழகம் முழுவதிருந்தும் 1500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் என்பது சிறப்பம்சமாகும். நமது மதுரை மாவட்டத்தில் இருந்து 3பெண்கள்உட்பட சுமார்  40க்கும் மேற்பட்டதோழர்கள் கலந்துகொண்டனர். நமது போராட்டத்தை வாழ்த்தி CITUமாநிலதலைவரும்,பெரம்பூர்சட்டமன்றஉறுப்பினருமானதோழர்A.சௌந்தர ராஜன்  சிறப்புரை நிகழ்த்தினார். . AIBSNLEA ,பொதுச்செயலர் தோழர்.பிரகலாத் ராய் அவர்களும் ,AIBSNLEA மாநில செயலர் தோழர் வீரபாண்டியன் ஆகியோரும் நமது உண்ணா விரத போராட்டத்தை ஆதரித்து வாழ்த்துரை வழங்கினர்.
போராட்டத்தின் வீச்சை கண்டு பணிந்த CGM நம் தலைவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். பேச்சு வார்த்தையின் இறுதியில் புதிய டெண்டரை விட்டு 140 ஒபபந்த ஊழியர்களையும் திரும்ப வேலைக்கு எடுக்க CGM அவர்கள் உறுதி அளித்துள்ளார். போராட்டம் வெற்றி அடைந்துள்ளது . தகுந்த நேரத்தில் போராட்ட அறைகூவல் கொடுத்து போராட்டத்தை வெற்றிகரமாக்கிய BSNLEU தமிழ் மாநில சங்கத்தையும் தமிழ் மாநில ஒப்பந்த ஊழியர் TNTCWU சங்கத்தையும் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரயும் நமது மதுரை மாவட்டசங்கம்    வாழ்த்துகிறது.

No comments: