Friday 26 September 2014

‘MAKE IN INDIA’தொழிலாளர் நல சட்டத்திக்கு மோடிவேட்டு.

அந்நிய நேரடி முதலீட்டுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்க வகை செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டமேக் இன் இந்தியாதிட் டத்தை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.அந்நிய நேரடி முதலீட்டைக் குறிக்கும் எப்.டி.. (FDI) என்ற சுருக்கத்துக்குமுதலில் இந்தியாவின் மேம்பாடுஎன புதிய விளக்கத்தையும் மோடி கூறிக்கொண்டார்.இந்த விழாவை துவக்கி வைத்த மத்தியதொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன், “இந்தியாவில் தொழில் தொடங்கு வதற்கான நடைமுறைகளை எளிதாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் தொழில் தொடங்க உரிமங்கள் வழங்குவதை எளிதாக்குவதன் மூலம் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல அரசு திட்டமிட்டுள்ளதுஎன்றார்.பெரும் முதலாளிகளான முகேஷ் அம்பானி, குமார் மங்கலம் பிர்லா,சைரஸ் மிஸ்ட்ரி, அசிம் பிரேம்ஜி உள்ளிட் டோரும் இந்நிகழ்ச்சியில் பேசினர்.இதையடுத்து பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவில் முதலீடு செய்ய அந்நிய நிறுவனங்கள் விரும்புகின்றன. இந்தியாவில் அதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதுஎன்றார். “வெறும்சலுகைகளால் மட்டுமே முதலீட்டை அதிகரித்துவிட முடியாது. முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும்என்றும் அவர் கூறினார்.25 துறைகள் தாரை வார்ப்பு முன்னதாக, இத்திட்டம் பற்றி செய்தியாளர்களிடம் பேசுகையில், அந்நிய நேரடி முதலீடுகளையும் இந்தியப் பெரும் கம்பெனிகளின் முதலீடுகளையும் வரவேற்கும் விதமாக தொழிலாளர் சட்டங்கள், தொழில் உரிம லைசன்ஸ் முறைகள் அனைத்தையும் தாராளமயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அந்நிய முதலீடுகளை வரவேற்கும் விதமாக தொழிலாளர் சட்டங்களையும் தொழில் தொடங்க உள்ள லைசன்ஸ் முறைகளையும் தாராளமயமாக்க உள்ளோம். பல பொதுத்துறைகள் தனியார்மயமாக்கப்பட உள்ளன. மருந்தியல் துறை,ஆட்டோமொபைல்ஸ்,ஜவுளி,விமானப்போக்குவரத்து,சுரங்கத்துறை, இராசயனத்துறை உள்ளிட்டு 25 துறைகள் அடையாளம் காணப்பட்டு அதில் அந்நிய முதலீடுகளை முழுமையாக வரவேற்க இருக்கிறோம்என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.ஏற்கனவே பிஎஸ்என்எல், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்களை மூடிட முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் செயல்படும் மண்டலங்களில் தொழிலாளர் சட்டங்கள், லைசன்ஸ் முறைகள்அமலில் இல்லை . இது தவிர எந்த வரியும்இல்லாத மண்டலமாக அவை செயல்படுகின்றன. இவை நாடு முழுவதும் அமல்படுத்தப்படப்போவதாக தெரிகிறது.இதன் புதிய பெயர்தான், மோடியின்மேக் இன் இந்தியாஎன்பதாகும்

No comments: