Tuesday, 2 September 2014

மதவெறியை வீழ்த்தவும் உயிர்த் தியாகம் . . .

ஆசிரியர் தினத்திலும் மதவெறியா?
சென்னையில் நடைபெற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசிய தாவது:விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதுபோல பாஜக ஆட்சி 100 நாட்களில் அம்பலப்பட்டு நிற்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு அளவின்றி அள்ளிக் கொடுக்க திட்டக்குழு கலைக்கப்படுகிறது. 3 மாதத்தில் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ந்துள்ளது என்று மோடி கூறுகிறார். உண்மையில் அம்பானிக்கும், அதானிக்கும்தான் சொத்து வளர்ந்துள்ளது. மோடியை ஆதரித்த ஊடகங்கள், ஒரு பகுதி மக்கள் இன்று அவரது பொருளாதார, வகுப்புவாத கொள்கைகளை விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர். ஆசிரியர் தினத்தை `குரு உத்சவ்என்று பெயர் மாற்றம் செய்து வகுப்புவாதத்தை புகுத்துகிறார்கள். மதச்சார்பின்மைக் கோட்பாட்டைப் பாதுகாக்கவும், மதவெறியை வீழ்த்தவும் உயிர்த் தியாகம் செய்யவும் இடதுசாரிகள் தயங்க மாட்டார்கள். 
ஆசிரியர் நாள் பெயர் மாற்றம்: வைகோ, ராமதாஸ் கண்டனம்.
.தி.மு.. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:ஆசிரியர் தினத்தின் பெயரை குருஉத்சவ் என்று பெயர் மாற்றிக் கொண்டாட அறிவிப்பு வெளியிட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது ஆகும்.பல்வேறு தேசிய இனங்களின் மொழி, இன, பண்பாட்டு அடையாளங்களைப் பேணி வளர்த்தால்தான் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாடு வலுப்பெறும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.எனவே, மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆசிரியர் தினத்தை குருஉத்சவ் என்று பெயர்மாற்றம் செய்யும் உத்தரவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.பா... நிறுவனர் டாக்டர் ராம தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் நாள் என்ற பெயரை குருஉத்சவ் என மத்திய அரசு மாற்றியிருப்பது சரியல்ல. சமஸ்கிருதத்தை மறைமுகமாக திணிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக் கையை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே ஆசிரியர் நாளை குருஉத்சவ் என்று பெயர் மாற்றம் செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments: