Tuesday 23 September 2014

‘யார் வேண்டுமானாலும் மூட BSNL பெட்டிக்கடையல்ல.’

யார் வேண்டுமானாலும் இழுத்து மூட பிஎஸ்என்எல் நிறுவனம் பெட்டிக்கடையல்ல
மத்திய அரசை விமர்சித்து பி.எஸ்.என்.எல். . யு பொதுச்செயலாளர் பி.அபிமன்யு பேச்சு

லாபம் இல்லை என காரணம்காட்டி இழுத்து மூட BSNL நிறுவனம் ஒன்றும் பெட்டிக் கடையல்ல என்று BSNL எம்ப்ளாயீஸ் யூனியன் அகில இந்திய பொதுச் செயலாளர் P.அபிமன்யு காட்டமாக கூறி னார்.சென்னையில் திங்களன்று (செப் 22) துவங்கிய BSNL எம்ப்ளாயீஸ் யூனியன் சென்னை தொலைபேசியின் 6வது மாநில மாநாட்டில் அவர் பேசியது வருமாறு:பொதுத்துறை நிறுவனங்களின் முக்கியத்துவத்தை தெரியாதவர்கள் தான் அதை தனியார் மயமாக்கி வருகின்றனர்.அந்த வகையில் காங்கிரசும் பாஜகவும் ஒரே நிலையில் தான் செயல்படுகின்றன. தரமான மொபைல் சேவை வழங்குவதில் எந்த தனியார் நிறுவனத்திற்கும் BSNL சளைத்தது அல்ல. அரசு மற்றும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் BSNL நிறுவனம் நட்டத்தில் இயங்குகிறது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்சமீபத்தில் வோடாபோன் நிறுவனம் அந்நிய நாட்டிற்காகஇந்தியாவை உளவு பார்த்ததாகமத்திய அரசின் உளவுத்துறையானராஅதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்த தொலைபேசி இணைப்புகள் மூலம் எதிரிநாடுகள் மட்டுமல்லாது, நட்பு நாடுகளை கூட வேவு பார்த்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆகவே தனியார் தொலைபேசி நிறுவனங்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.வேட்டிகட்டிய தமிழன் .ராசா தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது 4.5கோடி BSNL இணைப்புகளுக்கான கருவி வாங்கும் டெண்டரை எந்த காரணமும் இல்லாமல் ரத்து செய்தார். மேலும் 9 கோடியே 30லட்சம் இணைப்புகளுக்கான கருவிகளை சீனஅரசிடமிருந்து வாங்கும் டெண்டரையும் ரத்து செய்தார். BSNL நிறுவனம் தொலைதொடர்பு கருவி களை சீன நிறுவனங்களி டமிருந்து வாங்குவதை தடுக்கும் ஆட்சியாளர்கள் தனியார் நிறுவனங்கள் வாங்கினால் தடுப்பதில்லை. இதனால் BSNL நிறுவனத்தின் உள்கட்டுமானம் மற்றும் தளவாடப்பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. பொதுத்துறை நிறுவனத்தை அழிக்க பன்னாட்டு முதலாளிகளுடன் இணைந்து ஆட்சியாளர்கள் திட்டமிட்டு சதி செய்வதாக ஊழியர்கள் கருதுகின்றனர். அதிகாரிகளும் ஊழியர்களும் இணைந்து செயல்படுவதன் மூலம் BSNL நிறுவனத்தை முன்னேற்ற முடியும். சங்க வேறுபாடின்றி ஒற்றுமையுடன் செயல்பட் டால் பொதுத்துறை யை பாதுகாக்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்..சவுந்தரராசன் மாநாட்டின் வரவேற்புக்குழுத்தலைவர் .சவுந்தரராசன் MLA பேசுகையில், மத்திய பாஜக அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் தனது வழக்கமான பணியை துவக்கி விட்டது.வங்கி, இன்சூரன்ஸ் என ஒவ்வொரு துறையாக தனியார்மயமாக்கி வருகிறது. சொந்த தேவைக்காக தொலை த்தொடர்பு நிறுவனத்தை சில அமைச்சர்கள் பயன் படுத்தியதால் BSNL நட்டத்தில் தள்ளப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில் கூட பொதுத்துறை நிறுவனங்களை அரசே நடத்த வேண்டும் என்ற வலுவான போராட்டம் நடந்து வருகிறது. பொதுத்துறையை பாதுகாக்கவும் தொழிலாளர்களின் கோரிக்கையை வென்றெடுக்கவும் அனைத்து தொழிற்சங்கமும் இணைந்து போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.

No comments: