Saturday, 20 September 2014

ஆண்டிபட்டியில் நடந்த அற்புதமான மாவட்ட செயற்குழு...

அருமைத் தோழர்களே! 20.09.14 சனிக்கிழமை அன்று    நமது BSNLEUமாவட்ட சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் தோழர் சி.செல்வின் சத்தியராஜ் தலைமையில், ஆண்டிபட்டி தோழர்கள் மிகவும் சீரும் சிறப்புமாக மிக,மிக அற்புதமான உபசரிப் போடு அணைவரும்பாராட்டும்வண்ணம்   நடத்திக் கொடுத்தார்கள். தேனி மாவட்டத்தை உள்ளடக்கிய ஆண்டிபட்டி கிளத் தோழர்களுக்கு நமது BSNLEUமதுரை மாவட்டசங்கம்மனதாரபாராட்டுக்களை உரித்தாக்குகிறது....தோழர்கள் .தங்கப்பன்,தமிழ்வாணன் பாராட்டு பெற்றனர். 
செயற்குழுவின் ஆய்படுபொருட்களின் மீதானஅறிமுக உரையை  மாவட்டச் செயலர் தோழர். எஸ்.சூரியன் சமர்ப்பித்தார். அதன்மீது 24 தோழர்கள் விவாதத்தில் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். மாவட்டச் செயற்குழுகூட்டம், மத்தியரசின் பொதுத்துறை நிறுவனவிரோத, மக்கள் விரோத, ஊழியர் விரோத திட்டத்தை கண்டித்ததோடு, மத்தியரசு தவறான கொள்கைகளை கைவிட கோரி தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் BSNLஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு JAC அறிவித்துள்ள 23.09.14 நாடு தழுவிய தர்ணாவை மதுரையில் சக்தியாக நடத்துவது என்றும் முடிவு செய்தது.
அடுத்தகட்டமாக 30.09.2014 அன்று காலை 11 மணிமுதல் 2 மணி நேரம் நடைபெறும் வெளிநடப்பு போராட்டத்தையும் முழுமூச்சாக நடத்துவது என்றும், மேற்கண்ட போராட்டங்களுக்காக 30 அம்ச கோரிக்கை கொண்ட நோடீஸ்ம், போஸ்டரும் அனைத்துக் கிளைகளுக்கும் விநியோகிக்கப்பட்டது.
செயற்குழு, மதுரை மாவட்டத்தில் உள்ள 36 கிளைகளின் சார்பாக குறைந்த பட்சம் 50 தீக்கதிர் ஆண்டு சந்தாவை சேகரித்து செலுத்துவது என்றும், அக்டோபர் 11,12&13 தேதிகளில் திருச்சியில் நடைபெறும் மாநில  மாநாட்டிற்கு உரிய நிதியை காலத்தே வழங்குவது என்றும், முதல் நாள் மாநில மாநாட்டில் அதிகபட்ச உறுப்பினர்களை மாநாட்டிற்கு அழைத்து செல்வது என்றும், மத்திய/மாநில மாநாட்டிற்கான தீர்மானங்களை தயாரித்தளிப்பது என்றும், அடுத்த செயற்குழுவை டிசம்பர் மாதம் கம்பம் கிளை நடத்துவது அவ்வமயம் ஒருநாள் தொழிற்சங்க வகுப்பை நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
செயற்குழுவின் கவனத்திற்கு வந்துள்ள பிரச்சனைகளில், ஸ்தலமட்ட பிரச்சனைகளின் தீர்விற்கு ஸ்தலமட்டத்தில் கடிதம் கொடுத்து விவாதித்து, தேவை ஏற்படின் ஸ்தலமட்ட போராட்டம் நடத்துவது. லோகல் கவுன்சில் பிரச்சனைகளை LJCM-ல் எடுப்பது. மாவட்ட அளவில் பேசவேண்டிய பிரச்சனைகளை மாவட்டநிர்வாகத்துடன் மாவட்டசங்கம் பேசித் தீர்ப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. நிறைவுரையை மாநில துணைத்தலைவர் தோழர். எஸ்.ஜான் போர்ஜியா நிகழ்த்தினார். 
இறுதியாக மாவட்டப் பொருளர் தோழர். எஸ்.மாயாண்டி நன்றி கூற  செயற்குழு இனிதே நிறைவுற்றது. 

3 comments:

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

Dear Comrade!
your speeeeed in reporting today 's EC is awesome!! To have such energetic DS is very really nice!! :::::GANESAN DVP

SOORIYAN said...

thank you com.