
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் (எம்டிஎன்எல்), ஏர் இந்தியா, இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், இந்துஸ்தான் பெர்டிலைசர்ஸ் கார்ப்பரேசன், எச்எம்டி மிஷின் டூல் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் அடங்கும்.இதுதொடர்பாக மத்திய அமைச்சரவைக்கு அறிக்கை அளிக்கும் பொருட்டு ஆலோசனை நடத்துவதற்காக செவ்வாயன்று தில்லியில் மத்திய அமைச்சரவை செயலாளர் அஜித் குமார் சேத் தலைமையில் உயரதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை. எனினும் மேற்கண்ட நிறுவனங்களை உடனடியாக மூடுவதற்கான ஆலோசனைகளை வரையறை செய்து அமைச்சரவைக்கு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டதாக மத்திய அமைச்சரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிறுவனங்களில், இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் (எச்பிஎப்) தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மிக முக்கியப் பொதுத்துறை நிறுவனமாகும். அதேபோல பிஎஸ்என்எல் நிறுவனம், இந்திய ரயில்வேயை அடுத்து, சுமார் 2.5 லட்சம் ஊழியர்களைக் கொண்டு இயங்கி வருகிற மிகப்பிரம்மாண்டமான நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தை மூட அரசு முடிவு செய்தால் மிகப்பெரும் போராட்டம் வெடிக்கும் என பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் எச்சரித்துள்ளது.
No comments:
Post a Comment