மோடி அவர்களே! நீங்கள் செப்டம்பர் மாதம் ஒபாமாவைச் சந்திக்கும்போது, உலகம் முழுவதும் எந்தத் தடைகளும் இல்லாமல் உங்கள் பன்னாட்டுக் காப்பீட்டு நிறுவனங்களும் வங்கிகளும் கடை விரிக்க வேண்டும் என விரும்புகிறீர்களே! ஆனால், 2008 பொருளாதார நெருக்கடியில் பன்னாட்டுக் காப்பீட்டு நிறுவனங்களும், 500-க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகளும் உங்கள் நாட்டில் சீட்டுக்கட்டு சரிந்ததுபோல் திவாலாகி வீழ்ந்தது ஏன் என்ற கேள்வியைக் கேட் பீர்களா?எங்கள் நாட்டில் ஆயுள் காப்பீட்டுத் துறையை தேசியமயமாக்கி 57 ஆண்டுகளாகவும், பொதுக் காப்பீட்டுத் துறையைத் தேசிய மயமாக்கி 41 ஆண்டுகளாகவும் திவால் என்ற வார்த்தையே எங்கள் காதுகளில் விழவில்லையே!ஆனால், நாங்கள் இந்தியாவில் டாட்டாவோடு கைகோத்துக் காப்பீட்டு இணைவினைச் செய்ய அனுமதித்த உங்களின் பிரம்மாண்ட நிறுவனம் ஏ.ஐ.ஜி., நிதி நெருக் கடிச் சூறைக்காற்றில் தடுமாறிப்போனதே! இங்கே, அரசுப் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் பங்கு விற்பனைபற்றி பேசுகிறோம். ஆனால், உங்கள் நாட்டிலோ ஏ.ஐ.ஜி-யின் 80 சதவீத பங்குகளை அரசாங்கம் வாங்கி அல்லவா நெருக்கடியிலிருந்து அதைக் காப்பாற் றினீர்கள் என்று கேட்பீர்களா?எல்.ஐ.சி. 57 ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையைப் பெற்றுத் திகழ்கிறது. ஆனால், இந்திய காப்பீட்டுத் துறை அந்நிய முதலீட் டுக்கு 26 சதவீதம் என்ற வரையறையோடு திறந்துவிடப்பட்டு 13 ஆண்டுகளுக்குள்ளாக இங்கே வந்த அமெரிக்காவின் ஏ.ஐ.ஜி-யும், ஆஸ்திரேலியாவின் ஏ.எம்.பி-யும் வந்த வழியே திரும்பி ஓடி விட்டன. ஆயுள் காப்பீடு என்பது பாலிசிதாரரோடு உருவாகும் நீண்ட கால ஒப்பந்தம். 10 ஆண்டுகள்கூட நீடிக்காமல் நடையைக் கட்டும் இவர் களுக்கு எதற்காக, எந்த நம்பிக்கையில் இன்னும் இன்னும் கதவுகளைத் திறக்க வேண்டும்?யாருக்காகக் கூவுகிறீர்கள்?ஜெட்லி அவர்களே!உங்களுக்கு முந்தைய நிதி அமைச்சர் சமர்ப்பித்துள்ள பொருளாதார ஆண்டு ஆய்வறிக்கைகளைப் புரட்டிப் பாருங்கள். காப்பீட்டுத் துறையில் கடந்த 13 ஆண்டு களில் 26 சதவீத வரையறையோடு அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளதே, ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி வந்தது? எல்.ஐ.சி. 11வது ஐந்தாண்டுத் திட்டத்துக்குத் திரட்டித் தந்துள்ள தொகை ரூ. 7,04,000 கோடி. காப்பீட்டுத் துறையில் 13 ஆண்டுகளில் வந்துள்ள மொத்த அந்நிய முதலீடே ரூ. 6,300 கோடிதான். மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். ஆனால், நீங்கள் மடுவின் மீது ஏறி நின்று அது தான் பெரிது என்று கூவுவீர்கள் என்றால், நீங்கள் யாருக்காகக் கூவுகிறீர்கள் என்று கேட்க மக்க ளுக்கு உரிமை இருக்கிறது.ஹீரோவுக்கே இதுதான் கதி!எல்.ஐ.சி.யின் உரிமப்பட்டு வாடா விகிதம் 99.5 சதவீதம் உலகத் தில் எந்தக் காப்பீட்டு நிறுவன மும் செய்யாத சாதனை!மும்பை தாஜ் ஓட்டல் மீதான தீவிரவாதத் தாக்குதல் எல்லோருக்கும் நினைவில் இருக்கும். அதில் தனது உயிரையே விலையாகக் கொடுத்தவர் தீவிரவாத எதிர்ப்பு அதிரடிப் படைத்தளபதி ஹேமந்த் கர்கரே.
அவருடைய பாலிசி உரிமத்தை அவர் இறந்த 48 மணி நேரத்துக்குள் வீடு தேடிச் சென்று கதவைத் தட்டித் தந்தது எல்.ஐ.சி. ஆனால், அவர் ஒரு தனியார் நிறுவனத்திலும் பாலிசி எடுத்திருந்தார். அந்த நிறு வனமோ “எங்கள் பாலிசி விதி முறைகளில்தீவிரவாதம் உள்ளடங்கவில்லை.அவர் உயிருக்குஆபத்துஎன்று தெரிந்தே அந்தச் செயலில் ஈடுபட்டார்” என்று கூறி, உரிமத் தொகையை வழங்க மறுத்துவிட்டது. தேசம் போற்றிய ஹீரோவுக்கே இது தான் கதி என்றால், சாதாரண மக்களின் கதி என்ன?இயர்போனைக் கழற்றுங்கள்!மோடி அவர்களே! ஹை-டெக் பிரதமர் நீங்கள்! பெரு நிறுவன ஊடகங்கள் உங்களைப் பாராட்டலாம். ஒபாமா உங்க ளுக்குத் தடபுடல் வரவேற்பை அளிக்கலாம். ஆனால், உங்கள் காதுகளில் உள்ள இயர்போனை முதலில் கழற்றுங்கள்! அதன் பேரிரைச்சலில், காப்பீட்டுப் பய னுக்காக ஏங்கும் ஒரு சாமானிய மனிதரின் குரல் கேட்காமல் போய்விடக் கூடாது. { நன்றி : புதிய ஆசிரியன் } தோழர் .க.சுவாமிநாதன்-AIIEA
No comments:
Post a Comment