Thursday, 4 September 2014

கருப்புப்பண புழக்கத்தை தடுக்க களத்தில் வருமானவரித்துறை

மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அப்போது, கருப்பு பணம் அதிகளவில் புழக்கத்தில் விடப்படலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, கருப்பு பண புழக்கம், அதிகளவில் பணப்பரிமாற்றம் உள்ளிட்டவற்றை தடுக்க, வருமான வரித்துறைக்கு தேர்தல் ஆணையம் வழிமுறைகளை வழங்கியுள்ளது.இதற்கான ஏற்பாடுகளை வருமான வரித்துறை முழுவீச்சில் தொடங்கியுள்ளது. இது குறித்து, வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ 4 மாநில தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அளித்துள்ள நெறிமுறைகள் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும். தேர்தலின்போது பணபலம், கருப்பு பணம் உள்ளிட்டவற்றை தடுக்க சிறப்பு குழுக்களை வருமான வரித்துறை அமைத்து வருகிறது.அவற்றை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு விரைவில் அனுப்பும். வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களுடன் இணைந்து இந்த குழுக்கள் பணியாற்றும். புலனாய்வுத்துறையின் உதவியும் கோரப்படும்Ó என்றார்.

No comments: